வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஓட்டுனர் இல்லாத காண்டேயினர் லாரி .. அமெரிக்காவில் தானியங்கி லாரி அறிமுகம் Otto and Budweiser: First Shipment by Self-Driving Truck

மக்களை வியக்க வைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதாவது, செல்போன் மூலம் தானாக இயங்கக்கூடிய கார், ரோபோ என இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் டிரைவர் இல்லாத லாரி ஒன்று தானாக இயங்கி 50,000 லிட்டர் பீர் விநியோகித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கக்கூடிய லாரியை உபெர் மற்றும் அன்கியுசர் புஸ்க் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அந்த லாரி ‘ஓட்டோ’ என அழைக்கப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் கொலரோயாவில் இருந்து கொலரோடா ஸ்பிரிங்ஸ் என்ற இடத்துக்கு 50,000 லிட்டர் கேன் பீரை தன்னிச்சையாக இயங்கி விநியோகித்துள்ளது. 120 மைல் வரை டிரைவர் இல்லாமல் இயங்கிய அந்த லாரியை வர்த்தகத் துறையின் பெரிய சாதனையாக கருதுகின்றனர். இந்த லாரியில் வழிகாட்டும் கேமராக்கள், ரேடார், சென்சார் எனப்படும் உணர்வுக்கருவிகள் சாலையின் வழிகளை பார்க்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. தன்னிச்சையாக இயங்கி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள அந்த லாரி அமெரிக்கர்களின் விஞ்ஞான வளர்ச்சியை வெளிக்காட்டுகிறது.
இதுபோன்று இந்தியாவிலும் தானாக இயங்கும் லாரிகள் வர வேண்டும் என மக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.  minnambalam,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக