திங்கள், 10 அக்டோபர், 2016

Foul Play ?உடல்நலக்குறைவு ஏன்? அவரை கவனித்து வந்தது யார்? சிபிஐ விசாரணை தேவை: சசிகலா புஷ்பா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா இன்று (திங்கள்கிழமை) காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜெயலலிதாவுடைய தற்போது நிலைமை என்ன என்பதுதான் அதிமுக தொண்டர்களின் கேள்வி. ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார். மெட்ரோ ரயில் விழாவில் கூட நன்றாகத்தான் இருந்தார். திடீரென்று டீஹைட்ரேசன் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டீஹைட்ரேசன் என்று சொன்னால் எதனால் அது வந்தது. அவருக்கு பின்னால் இருந்து 2 மாத காலமாக கவனித்தது யார். ரிப்போர்ட் என்ன. மருத்து மாத்திரைகள் என்ன. ஏன் இந்த நிலைமை உருவானது என்பதற்கு சிபிஐ விசாரணை தேவை. அவர்கள் தானாகவே இப்படி உடல்நலம் சரியில்லாமல் ஆனார்களா. இல்லை பின்னால் இருந்த கும்பலால் ஆக்கப்பட்டார்களா என்பதை தெரிய வேண்டும் என்று தொண்டர்கள் வேதனையுடன் உற்றுநோக்கியிருக்கிறார்கள். இவ்வாறு கூறினார். நக்கீரன், இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக