ஞாயிறு, 9 அக்டோபர், 2016

காங்., - தி.மு.க., உறவு 'டமார்? உள்ளாட்சி இட பங்கீடு இழுபறி ...

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடந்த பேச்சின் போது, கட்சியினரை,
அவமானப்படுத்தி விட்டதாக, தி.மு.க., தரப்பு மீது, காங்கிரசார் கடும் கோபத்தில் உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில், ஏற்பட்ட கடும் தோல்வியை அடுத்து, தமிழக காங்கிரஸ் தலை வராக இருந்த இளங்கோவனை பதவி விலகக் கேட்டுக் கொண்டது, காங்கிரஸ் தலைமை. இதையடுத்து, தன் பதவியை ராஜினாமா செய்தார் இளங்கோவன். உள்ளாட்சி தேர்தல் நீண்ட இழுபறிக்குப் பின், தமிழக காங்.,கின் புதிய தலைவராக, திருநாவுக்கரசர் நியமிக்க பட்டார். அவர் நியமிக்கப்பட்டு, சில நாட்களி லேயே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளி யானது. இதையடுத்து, தி.மு.க.,வுடன், இட பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்த சென்றார் திருநாவுக்கரசர். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுடன், கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரை வைத்து, பேச்சு நடத்தினார் திருநாவுக்கரசர். அப்போது, எல்லா ஊர்களிலும், மிகக் குறைவான இடங்களையே விட்டுக் கொடுப்பதாக தெரிவித்த ஸ்டாலின், 'உங்களுக்கு அதிகதொகுதிகளை விட்டுக் கொடுத்தால்,அது, அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக போய்விடும்.


அதனால், இம்முறை இடங்கள் குறைவாகத்தான் கொடுக்க முடியும். சட்டசபை தேர்தலில், இப்படித் தான், கூடுதல் இடங்களை விட்டுக் கொடுத்து, அவற்றில் தோற்று, அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வழி வகுத்து விட்டீர்கள்' என்று, காட்டமாக கூறியுள்ளார்.
இதனால், முகம் இறுகிப் போய், திரும்பினர் காங்கிரஸ் தலைவர்கள்.பின், அடுத்தடுத்த சந்திப் பின் போதும், இப்படிப்பட்ட காட்டமான வார்த்தை களே, ஸ்டாலினிடம் இருந்து வெளிப் பட்டுள்ளன. ஒரு கட்டத்தில், 'இவ்வளவு தான் எங்களால் கொடுக்க முடியும்; தேவையானால், நீங்கள் மாற்று ஏற்பாட்டை செய்து கொள்ள லாம்' எனவும் ஸ்டாலின்கூறியுள்ளார்.
இதனால் மனம் நொந்து போன, திருநாவுக்கர சர், பேச்சின் போது நடந்த அத்தனை விஷயங்களை யும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம் தெரிவித்துள்ளார். அப்போது, 'உள்ளாட்சி தேர்தலை, இப்போது இருக்கும் நிலையிலேயே எதிர் கொள்ளுங்கள்; தேர்தலுக்குப் பின், நிஜமாகவே மாற்று ஏற்பாட்டில் இறங்குங்கள்' என, ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, தேர்தல் நிறுத்தப்பட்டு விட, அடுத்து, தேர்தல் அறிவிப்பு வரும்போது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி இருக்குமா என, தெரியவில்லை. காங்கிரஸ் மாநில நிர்வாகி ஒருவர் கூறுகை யில், 'இந்த அவமானங்களை பொறுக்க முடியாமல் தான், காங்கிரஸ், அ.தி.மு.க.,வை நோக்கி நகர்கிறது. அடுத்தடுத்த கட்டங்களில், அ.தி.மு.க., தலைவர்களை, காங்கிரஸ் தலை வர்கள் சந்தித்து பேசி, நட்பை வளர்ப்பர். தொடர்ச்சியாக, கூட்டணிக்கு வழிவகுக்கப் படும்' என்றார்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக