செவ்வாய், 11 அக்டோபர், 2016

TN. de facto CM. O.Panneerselvam ! முதல்வரின் எல்லா அமைச்சு பொறுப்புக்களும் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது.. ஆளுநர் அறிவிப்பு!

முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவதாக
ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டியிருப்பதால் மாற்று ஏற்பாடு குறித்து எதிர்கட்சி தரப்பில் குரல் எழுப்பபட்டு வந்தது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடந்து நீடிப்பார். ஆனால் அவரது இலாகாக்களை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கவனித்துக் கொள்வார். அமைச்சரவை கூட்டத்துக்கும் அவர் தலைமை வகிப்பார். மாநில பிரச்னைகள், குறித்து முக்கிய முடிவு எடுக்கவும், அமைச்சரவையை கூட்டவும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று திரும்பும் வரை பொது மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைகளையும் சேர்த்து நிதியமைச்சர் பன்னீர் செல்வம் கவனித்துக் கொள்வார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைப் படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தினமணி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக