ஞாயிறு, 23 அக்டோபர், 2016

சசிகலா புஷ்பா :பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் பேசுவேன்

புதுடெல்லி பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் பேசுவேன் என்று சசிகலா
புஷ்பா தெரிவித்தார். சசிகலா புஷ்பா எம்.பி. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தொடர்ந்து மிரட்டல் தமிழகத்தில் முதல்–அமைச்சரின் உடல் நிலை பற்றி பேசியவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இதனால் இளைஞர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பேச்சு சுதந்திரம் இல்லை. முதல்–அமைச்சர் பூரண குணம் அடைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாக உள்ளது. அவருக்கு குடும்பம் இல்லை. மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்.
எனக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. 2 கைகளையும் வெட்டுவார்களாம், முகத்தில் திராவகம் வீசுவார்களாம். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.

நான் ஒரு பேட்டி கொடுத்தாலே வழக்கு போடுகிறார்கள். டெல்லியில் இருக்கும் நான் தமிழ்நாட்டில் ஒருவரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனக்கு வந்த மிரட்டல் பற்றி நான் கொடுத்த புகாருக்கு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஒரு பெண் என்றும் பாராமல் பலவிதமாக என்னை சித்தரித்து தமிழகத்தில் சிலர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதனால் தென் மாவட்டங்களில் சாதி கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. எம்.பி. பாராளுமன்றத்தில் இன்னும் நான் அ.தி.மு.க. எம்.பி.யாகவே செயல்படுவேன். கொறடா அனுமதியின்றி பேச எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவேன். தமிழகத்தில் வழக்குகளால் பாதிக்கப்படும் இளைஞர்களின் நிலை பற்றி பேசுவேன். எல்லா சமுதாயத்தினருக்காகவும் எனது குரல் ஒலிக்கும்.
நான் தமிழ்நாட்டுக்கு சென்றபோது மத்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. பிரதமர் மோடியே கடிதம் எழுதி எனக்கு ஆறுதல் கூறியிருந்தார். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினா தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக