புதன், 19 அக்டோபர், 2016

விக்கிலீக்ஸ் ...அசாஞ்சேவின் இணையத்தை துண்டித்த ஈக்வடார்!

ஜுலியன் அசாஞ்சேவின் இணைய வசதி ஈக்வடாரால் துண்டிக்கப்பட்டிருக்கிறது என விக்கிலீக்ஸ் தெரிவித்திருக்கிறது. அசாஞ்சே வெளியிட்டிருக்கும் ஆவணங்கள் காரணமாக, அவரை விமர்சித்திருக்கும் அமெரிக்க அரசு மற்றும் ஆங்கிலேய அரசு, தம்மீது பழி போடக்கூடாது எனும் நோக்கோடு இது செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கடந்த நான்கு வருடங்களாக லண்டனின் ஈக்வடார் தூதரகத்துக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் அசாஞ்சேவின் இணைய இணைப்பு துண்டிக்கப்பட, தேசியக் கட்சியொன்றே காரணம் என, திங்கள் காலை வெளியான ட்வீட் ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பிட்ட ட்வீட்டுக்கு உலகம் முழுதும் சமூக தளங்களிலிருந்து பதில் கருத்துகள் வெளியானபடி இருக்கின்றன என்றாலும், விக்கிலீக்ஸ் இதுகுறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடவில்லை.
அமெரிக்க குடியரசு வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சார மேலாளரிடம் இருந்து, ஒரு தொகுப்பு மின்னஞ்சல்கள் வெளியிடப்பட்டவுடனேயே அசாஞ்சேவின் இணைய வசதி துண்டிக்கப்பட்டிருப்பது தற்செயலானது அல்ல என சிலர் கருதுகின்றனர். கிளிண்டனின் கோல்ட்மான் சாஷ்ஸ் உரைகளை, விக்கிலீக்ஸ் சனிக்கிழமையன்று வெளியிட்டது. குறிப்பிடப்படும் மின்னஞ்சல்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக டோனால்ட் ட்ரம்ப் இயங்க வடிவமைக்கப்பட்டதுபோல் தோன்றியதாக ஒரு தரப்பு தெரிவிக்கிறது. மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக