புதன், 19 அக்டோபர், 2016

ப.சிதம்பரத்துக்கு கொலை மிரட்டல் .. அவிங்களே தயாரிச்சதோ?

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு கொலை மிரட்டல் விடப்படுள்ளது. இதுதொடர்பாக, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் அவர். கொலை மிரட்டல் விடுத்தவர் யார் என்பதைக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி ஆணையரிடத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அருள்பெத்தையா மனு கொடுத்தார். அந்த மனுவில் “ட்விட்டர் பக்கத்தில் ராஜகோபாலன் சுப்ரமணியன் என்றபெயரில், கடந்த 16ஆம் தேதி இடப்பட்டுள்ள பதிவு ஒன்றில், ''ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் ப.சிதம்பரத்தையும், அவரது குடும்பத்தினரையும் ஒழித்துக் கட்டுவதுதான் சிறந்த வழி'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவு எங்களுக்கு கடுமையான அதிர்ச்சியை உருவாக்கியது. சமூக வலைதளத்தில் பகிரங்கமாக பதிவிடப்பட்டுள்ள இந்த மிரட்டல் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, மிரட்டல் விடுத்தவர் யார் என்பதைக் கண்டுபிடித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.'' இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை ஏற்றுக்கொண்ட கமிஷனர் அலுவலகம் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் சைபர் கிரைம் காவல்துறையினரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக