வியாழன், 27 அக்டோபர், 2016

சொல் புதிது .. இளைய சமுதாய பேரவை அமைப்பு விழா சிதம்பரத்தில் ... சுபவீ அறைகூவல்

தம்பரம் : 'சொல் புதிது' இளைய சமுதாய பேரவை என்ற புதிய சமூக அமைப்பு துவக்க விழா சிதம்பரத்தில் நடந்தது.
சிதம்பரம் ஈ பைவ் கல்வி அறக்கட்டளை சார்பில் இளைஞர்கள், மாணவர்கள் முன்னேற்றத்திற்காக 'சொல் புதிது இளைய சமுதாயப் பேரவை' என்ற புதிய அமைப்பு துவக்க விழா சிதம்பரத்தில் நடந்தது. விழாவிற்கு, அறக்கட்டளைத் தலைவர் அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஈ பைவ் அறக்கட்டளை அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். சுப வீரபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் புதிய அமைப்பின் துணைத் தலைவர் அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் முன்னாள் பதிவாளர் பஞ்சநாதம், செயலர் சிதம்பரம் தொழிலதிபர் அருணேஸ்வரன், நிர்வாகி கார்த்திகேயன், அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தினமளர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக