வியாழன், 27 அக்டோபர், 2016

கிணற்றில் மழைநீர் சேகரிக்கும் முறை

கிணற்றில் மழைநீர் சேகரிக்கும் முறை.

தமிழகத்தில் பருவமழை தாமதமாகி மலையடிவார மாவட்டங்களில் விவசாயக் கிணறுகள் வறண்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதனால், கிணறுகளில் மழைநீரைச் சேமிக்கும் புதிய முறையைப் பின்பற்ற வேளாண் துறை வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கிணற்றுப் பாசனமே விவசாயத்துக்கு அடிப் படையாகவும், குடிநீர் ஆதாரமாக வும் விளங்குகிறது. கடலோர மாவட்டங்களில் 25 அடி முதல் 40 அடி வரையிலான 75 ஆயிரம் கிணறுகளும், மற்ற மாவட்டங்களில் 40 அடி முதல் 90 அடி வரையிலான 2.7 லட்சம் கிணறுகளும் உள்ளன. பொதுவாக ஏரிகள், குளங்கள், ஊருணி, கால்வாய் மூலம் கிணறு களின் நீர் ஆதாரம் செறிவூட் டப்படுகிறது. தற்போது வறட்சி யால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு, ஆழ்துளைக் கிணறுகள் பெருக்கம் காரணமாக விவசாயக் கிணறுகளில் நீர் ஆதாரம் வறண்டு விட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் கூறியதாவது: கடந்த காலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் தேவையான அளவு பெய்வதில்லை. அதனால், 14 மலையடிவார மாவட்டங்களில் உள்ள கிணறுகள் பெரும்பாலும் வறண்டு விட்டன. மக்களிடம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்து வது தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இல்லாததால் மழைநீர் சேகரிப்பு இல்லை.
நீர்தாங்கிகளின் அமைப்பை விளக்கும் வரைபடம்.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்.20-ம் தேதி முதல் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், பெரும் பாலான மாவட்டங்களில் பருவ மழையின் தூறல்கூட பெய்யாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு ஆய்வின்படி, தமிழகத்தில் 8 முதல் 13 எண்ணிக்கையிலான மழை நாட்கள் மட்டுமே வடகிழக்குப் பருவ மழையால் கிடைக்கப் பெற்றது.
ஒருபுறம் குறைந்த மழை நாட்கள் நிலவுவதும், மறுபுறம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் செயல்பாடுகள் இல்லாததாலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் நிலத்தடி நீருக்கே நிரந்தர சிக்கல் ஏற்படலாம். தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்யும்போது மழை நீரை, வறண்டுள்ள அனைத்து கிணறுகளிலும் முறைப்படி வடி கட்டிச் சேமிக்கலாம்.
ஒவ்வொரு கிணற்றுக்கும் அருகில் அதிகமாக மழைநீர் தேங்கும் இடங்களில் இருந்து, சல்லடை வலையிடப்பட்ட பிவிசி குழாய்களைப் பதித்து, அதன் மறுபுறம் கிணற்றுக்குள் இருக்கு மாறு பொருத்தினால் மழைநீரை அதிகளவு சேமிக்கலாம். இதனால், 80 அடி உள்ள கிணறுகளில் 6 முதல் 5 நீர்த் தாங்கிகள் செறிவூட் டப்பட்டு, தற்போதைய மழைக் காலம் முடிந்தாலும், எதிர்வரும் கோடைக் காலத்தில் விவசாயம் தடையின்றி நடக்கும். குடிநீர் பற்றாக் குறை இல்லாமலும் இருக்கும். கிணறுகளில் நீரைச் சேமித்தால் பக்கவாட்டில் பல்வேறு திசை களில் உள்ள நீர்த் தாங்கிகள் செறிவூட்டப்படும்.
அதனால், தூர்ந்துபோன ஆழ்துளைக் கிணறுகள் உயிர் கொடுக்கப்பட்டு, நிலையான பாசனம் நடக்க வாய்ப்புள்ளது. திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரையிலான மலையடிவார மாவட்டங்கள் மட்டுமல்லாது, கடலூரில் இருந்து தூத்துக்குடி வரையிலான கடலோர மாவட்டங் கள் வரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், தற்போது வறட்சியால் படிந்துள்ள உப்பு அலசப்பட்டு நிலம் சீரடைய வாய்ப் புண்டு என்று அவர் கூறினார்.
hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக