புதன், 19 அக்டோபர், 2016

திமுக அதிகாரப்பூர்வ இணையதள அணி :- கிளிமூக்கு அரக்கன் கருத்து

திராவிட அனுதாபிகள் அதிக அளவில் செயற்படும் தமிழ் இணையச்சூழலை
நான் மேலே சொன்ன நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு பார்த்தால், திமுகவிற்காக அல்லது திராவிட சித்தாந்தங்களுக்காக எழுதுபவர்கள் எல்லாம் திமுகவின் உறுப்பினர்கள் அல்ல. தன் முன்னேற்றத்திற்கு திராவிட இயக்கங்கள் குறிப்பாக திமுக தளம் அமைத்துக்கொடுத்ததற்கான நன்றிக்கடன்.

சத்தியமூர்த்தி பவனாக்க விரும்பினால் திமுக நிச்சயம் அதிகாரப்பூர்வ இணையதள அணியை உருவாக்கவேண்டும். ஏற்கனவே கிளிமூக்கு அரக்கன் அணி, டான் அசோக் அணி, உமா மகேசுவரன் லாவோட்சு ஊடக அணி என இணைய திமுக குறுநில மன்னர்கள் உருவாகிவிட்டனர் என்று மே 17 தேநீர் கடை சந்திப்புகளில் திருமுருகன் காந்தி பொறுமுகிறாராம். இந்நிலையில் அதிகாரப்பூர்வ அணி வந்துவிட்டால் அது கொஞ்சம் பெரிய சமஸ்தானமாக இருக்கும்.

இது கலைஞர் சொல்லியோ ஸ்டாலின் சொல்லியோ எம்.எம்.அப்துல்லா சொல்லியோ நான் சொல்லியோ வருவதில்லை. நன்றிக்கடன் எண்ணமும் திமுக பலவீனமடைந்துவிட்டால் சமூகநீதி சுக்கு நூறாக்கப்பட்டுவிடுமோ என்ற பதைபதைப்பும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி பல ஆயிரம் பேரை இணையத்தில் திமுகவிற்காக எழுத வைக்கிறது. ஒரு சில விசயங்களுக்கு மடை போடக்கூடாது. மடை போட்டால் சீராக ஓடும் ஆறு குட்டையாய் தேங்கிப்போய்விடும்.
எப்படி குட்டையாய் மாறிவிடும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன், ஈழமாயையில் பலருக்கு பார்வை மங்கிப்போன 2009 - 2012 காலங்களில் இணையத்தில் திமுக என்றாலே அசூயையுடன் பார்க்கப்பட்டது. அக்காலங்களில் திமுகவிற்காக தமிழ்நாஜிக்களுடன் தனி ஆட்களாக மல்லுக்கட்டிய டான் அசோக் , சித்தன் கோவை (ஆனந்த்குமார்) ஆகியோரை அதிகாரப்பூர்வ இணையதள பொறுப்பாளர்களாக நியமிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் இருவரையும் எனக்குப்பிடிக்கும், ஆனால் இவர்களுக்கு பொறுப்பு கொடுத்து அரியணையில் அமரச்செய்தால் எனக்கு "லைட்டா" புகையும். பொது நோக்கிற்காக செயற்படுவதில் இருந்து Peer Pressure - Peer Jelousy யில் நோக்கம் சிதறி "அட்டாக் டான் அசோக்", " அட்டாக் சித்தன் கோவை" என்று மாறிப்போகும்.
என்னைப்போல உங்களில் பலருக்கும் அதே "லைட்" புகை வரலாம்.
ஆக திமுக தேவையில்லாத ஆணியை பிடுங்காமல், களப்பணிகளில் மேலும் சிறப்பாக செயற்பட்டாலே போதும். நிச்சயம் ஏதாவது ஓர் ஆணியை பிடுங்கியே தீருவோம் என்று அறிவாலயம் நினைத்தால், திமுகவிற்காக எழுதும் சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர்களை அவ்வப்பொழுது அறிவாலயம் வரவழைத்து சால்வை பணமுடிப்பு உடன், கலைஞர் ஸ்டாலின் அருகே ஒரு சிலப்புகைப்படங்கள் எடுத்து கொடுக்கலாம்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக