புதன், 19 அக்டோபர், 2016

திருமாவளவன் .. பொன்.இராதாகிருஷ்ணன் சந்திப்பு ஒரு கூட்டணி பேச்சு வார்த்தைதான்... ராம்விலாஸ் பாஸ்வான் பாணி அரசியல் ?

Its a courtesy meeting, says Pon Radhakrishnanசென்னை: மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவனை சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது சாதாரணமானது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடாது என்று திருமாவளவன் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதே நேரத்தில் பாஜக போட்டியிடும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவோம் என்பது பற்றி மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்தநிலையில் தொல். திருமாவளவனை சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இன்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
அரைமணிநேர சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இது நட்பு ரீதியிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார். எங்களுடைய நட்பு 25 ஆண்டுகாலமாக தொடர்கிறது. தமிழன் என்ற முறையில் அண்ணன் தம்பிகளாக பழகி வந்தோம். இன்று சந்தித்து பேசினோம் என்று கூறினார்.
இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிரித்த ராதாகிருஷ்ணன், அவர் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறார். அந்த கூட்டணிக்குள் குழப்பம் வந்து விடும் என்றார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்புதான் என்றும் கூறியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் திருமாவளவனை பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எய்ம்ஸ் மருத்துவர்களை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அனுப்பி, மத்திய பாஜக அரசு உளவு பார்க்கிறது என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு அப்போது பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், உளவு பார்க்கவேண்டிய அவசியம் பாஜகவுக்கு கிடையாது என்றும், தமிழகத்தின் கவுரவத்தை காக்கும் வகையில் திருமாவளவன் பேச வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று பொன். ராதாகிருஷ்ணன் இன்று திருமாவளவனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக