ஞாயிறு, 2 அக்டோபர், 2016

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தமிழக பிரதிநிதி சுப்பிரமணியன்: அரசு பரிந்துரை

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தமிழக பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்ரமணியனை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ''காவிரி மேலாண்மை வாரியத்தை வரும் 4-ம் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். முதலில் இதற்கான ஒருங்கிணைப்பாளரை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்தக் குழுவில் காவிரி நீர்ப் பாசன மாநிலங்களான கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் சார்பாக இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை சனிக்கிழமை மாலை 4 மணிக்குள் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அனைத்துப் பணிகளை யும் வரும் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்தக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களிலும் காவிரி நீர்ப் பாசனப் பகுதியை முழுமையாக ஆராய்ந்து வரும் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்கான தமிழக அரசின் பிரதிநிதியாக சுப்பிரமணியனை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. சுப்பிரமணியன் தமிழகத்தின் காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. tamilthehinducom

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக