புதன், 19 அக்டோபர், 2016

சிறையில் இருக்க வேண்டியது ஈஷாதான் ..சிவா அல்ல பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

கோவையில் சமூக ஆர்வலர் சிவா பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 47 இயக்கங்கள் இணைந்து கோவை பவர் ஹவுஸ் முன்பு சிவாவை விடுதலை செய்யக் கோரி இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கு.ராமகிருஷ்ணனபழங்குடியின மக்களின் 44 ஏக்கர் நிலத்தை ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் அபகரித்து வைத்திருக்கிறார். சோற்றுக்கே வழியில்லாத இந்த மக்களிடம் இருந்து அவர்களுக்கே தெரியாமல் ஆக்கிரமித்திருக்கிறார். மக்களுக்காக போராடிய சிவாவை போலீசார் கைது செய்து சிறையில் அநியாயமாக வைத்துள்ளார்கள். சிறையில் இருக்க வேண்டியது சிவா அல்ல. ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ். அந்த மையத்தை மூடியாக வேண்டும் என்றார்.பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.அருள்குமார்
தொடர்புடைய செய்தி
சமூக ஆர்வலர் கைது: ஈஷா யோகா மையத்தின் திட்டமிட்ட செயல் என குற்றச்சாட்டு</கோவை, கோத்தனூரைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சிவா. இவர் கோவை பூண்டி வெள்ளயங்கிரி மலையடிவாரத்தில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் விதிமுறைகளை மீறி கட்டிடங்களை கட்டிக் கொண்டிருப்பதாகவும், யானை வழித்தடங்களை மறைத்திருப்பதாகவும் அவர் ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு முனைகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. இந்த நிலையில் தன்னையும், தனது தோழிகளையும் மானபங்கபடுத்த முயற்சித்ததாக வெள்ளயங்கிரி மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தில் இருந்து மகேஸ்வரி என்ற பெண் சிவா மீது ஆலாந்துரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரித்த போலீசார், அந்த புகாரை பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றினர். அவர்கள் சிவா மீது வழக்குப்பதிவு செய்து 15.01.2016 மாலை 6 மணி அளவில் சிறையில் அடைத்தனர்.
இந்த புகார் பொய்யானது என்று கூறியுள்ள சிவாவின் வழக்கறிஞர் கலையரசன், இது ஈஷா யோகா மையத்தின் திட்டமிட்ட செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார். நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக