சனி, 1 அக்டோபர், 2016

கழகத்தை கைப்பற்ற நினைக்காதே ! அம்மாவை உடனே காட்டு ! தற்கொலை செய்வோம் !பரபரப்பு போஸ்டர்

ADMK cadres poster for Jayalalithaaசென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டனில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் சிகிச்சை அளித்து வருகிறார். >இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவை அனைவரும் பார்க்க வேண்டும். அவரை யாரோ சிலர் ரகசியமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று சசிகலா தரப்பு மீது பாய்ந்திருந்தார்.
தற்போது தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக என்ற பெயரில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள வாசகம்:
எச்சரிக்கை! எச்சரிக்கை!
புரட்சித் தலைவரின் இறப்பில்
ஒரு கும்பல் கொள்ளையடித்தது!

புரட்சித் தலைவி அம்மாவிடம்
நரிகளின் ஜம்பம் பலிக்காது!
எங்கள்
அம்மாவை உடனே காட்டு இல்லையேல்
தற்கொலை
செய்துகொள்வோம்!
கழகத்தைக் கைப்பற்ற நினைக்காதே! அது நடக்காது
அடிமையாக இருப்போம் அம்மா ஒருவருக்கே!!
- தென்சென்னை வடக்கு மாவட்டம்  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக