ஞாயிறு, 23 அக்டோபர், 2016

சத்துணவு முட்டை வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் ..விரைவில் விபரமாக வெளியிடுவேன் .. இளங்கோவன் அதிரடி

டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து வந்த பிறகு முழு உற்சாகத்தோடு இருக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். விரைவில் தேசிய செயலாளர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ஈ.வி.கே.எஸ்., திமுக-வோடு நல்லுறவில் உள்ளார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தாராபுரம் அடுத்த மூலநூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது மதிய சத்துணவு திட்டத்தில் முட்டைகள் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இதுபற்றிய முழு விவரங்களை தான் விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறினார். பின்னர் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகவும் கூறினார்.மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக