செவ்வாய், 11 அக்டோபர், 2016

பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு நவ நிர்மாண சேனா எச்சரிக்கை! பாகிஸ்தான் கலைஞர்களோடு பணியாற்றினால்......

பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்களுடன் பணியாற்றினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் மகேஷ்பட் மற்றும் கரண் ஜோகார் உள்ளிட்ட பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு நவ நிர்மான் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஊரி தாக்குதலையடுத்து பாகிஸ்தான் கலைஞர்கள் மும்பையைவிட்டு வெளியேற வேண்டுமென்று நவ நிர்மான் சேனா கூறியிருந்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இந்த நிலையில் கலைஞர்களுக்கு நாடு மற்றும் மதம் கிடையாது என்று மகேஷ்பட் மற்றும் கரண் ஜோகார் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நவ நிர்மான் சேனாவின் கிளை பிரிவான சித்ராபத் சேனா, சாதகமான முடிவை எடுக்காவிட்டால் அதற்கான பலனை அனுபவிக்க இருவரும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக