செவ்வாய், 11 அக்டோபர், 2016

கடலூர் ..ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாலையோரத்தில் வீசப்பட்டிருந்ததால் மக்கள் அதிர்ச்சி

கடலூர் அருகே சாலையோரத்தில் ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்டு கிடந்தது.பண்ருட்டி அருகே கோழிப்பாக்கம் கிராமத்தின் ஓடைப் பக்கத்தில் நேற்று மாலை 1000, 500, 100 ரூபாய் நோட்டுகள் பரவிக் கிடப்பதாக தகவல்கள் பரவியது. ஊர்மக்கள் சென்று பார்த்தபோது ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. இதனை சிலர் வீட்டுக்கு அள்ளிச் சென்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பண்ருட்டி போலீசார் விரைந்து சென்று அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.>கருப்பு பணமா, கள்ள நோட்டுகளாக  இருக்குமா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அண்மையில் சேலத்தில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூபாய் நோட்டுகளில் 5 கோடி அளவுக்கு கொள்ளைடியக்கப்பட்டது. அந்த பணமாக இருக்குமா என போலீசார் பலவித கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ;எஸ்.பி.சேகேர்; நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக