லண்டன் டாக்டர் ரிசேர்ட் பேல் அவர்கள் நுரையீரலில் சீழ்பிடிப்பு மற்றும் நுரையீரலில் ஏற்படும் காயங்கள் , மல்டிபிள் ஆர்கன் பெயிலியர் எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளுறுப்புகள் செயலிழப்பது போன்ற பிரச்னைகளில் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்
எல்லாவிதமான
தீவிர சிகிச்சைகளும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளித்து உடல்நலம்
முன்னேற்றம் அடையாதநிலையில் லண்டனில் இருந்து மருத்துவர் ரிச்சர்ட் பேல்
வரவழைக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை
நிர்வாகம் நேற்றுதான் ரிச்சர்ட் பேல் தலைமையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை
நடந்து வருவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த மருத்துவர்
ரிச்சர்ட் பேல். இவரின் பின்னணி என்ன? எந்த மருத்துவத்தில் இவர் பிரபலம்.
எண்பதுகளில் எம்.ஜி.ஆர்-க்கு இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல்
டாக்டர் காணுவின் அறிவுரையின்பேரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில்
உள்ள புரூக்ளின் டவுன்ஸ்டேட் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை
எடுத்து நலமுடன் திரும்பி வந்தார். அதன்பிறகு, எம்.ஜி.ஆரின் தீவிர
தொண்டர்கள் அமெரிக்காவில் சிகிச்சை அளித்த ஜப்பானைச் சேர்ந்த நரம்பியல்
நிபுணர் டாக்டர் காணுவின் படத்தை பூஜையறையில் வைத்து வணங்கினார்கள்''
தலைவர் உயிரைக் காப்பாற்றியவர்ப்பா'' என, வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு
பெருமை பொங்க டாக்டர் காணுவின் படத்தைக் காட்டியது வரலாறு.
முதல்வர் ஜெயலலிதா லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் அளிக்கும் சிகிச்சையில் நலமுடன் வீட்டுக்குத் திரும்பிவிட்டால், லட்சக்கணக்கான தொண்டர்களின் வீட்டில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டு வணங்கப்படும் என்பது உறுதி. உலகெங்கிலும் பல நுரையீரல் நோய் நிபுணர்கள் இருக்க ரிச்சர்ட் பேல்லை தேர்வு செய்யக் காரணம், அவரது சிறப்பம்சம் ஆகியவை என்ன? விசாரணையில் இறங்கினோம்.
லண்டனில் உள்ள ஆங்கில பத்திரிகையாளர்கள் சிலரைத் தொடர்புகொண்டு வாங்கிய சில தகவல்களை இங்கே உங்களுக்காக அளிக்கிறோம்.
ரிச்சர்ட் பேல், உலகிலுள்ள முக்கிய நுரையீரல் நோய் நிபுணர்களில் மிகவும் முக்கியமானவர். மரணத்தின் அருகே சென்ற பலர் இவரது சிகிச்சையால் நலம்பெற்று வீட்டுக்குத் திரும்பியிருக்கின்றனர். எவ்வளவு சிக்கலான நுரையீரல் நோய்களையும் சிறப்பாகக் கையாண்டு சிகிச்சை அளிக்கக்கூடியவர் என்று லண்டனில் இருக்கும் பல மருத்துவமனைகள் இவரது புகழ் பாடுகின்றன. லண்டனில் மிகவும் புகழ்பெற்றது கிங் மருத்துவக் கல்லூரி. இந்த மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைத்துறை பேராசிரியராக இருப்பவர் ரிச்சர்டு ஜான் பேல். அத்துடன் செயிண்ட் தாமஸ் அறக்கட்டளையில் முக்கிய ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். 1984ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்திருக்கிறார். 1990ஆம் ஆண்டு மயக்க மருந்து தொடர்பான மேல் படிப்பை ராயல் காலேஜ் ஆப் அனஸ்தடிக்ஸ்-ல் படித்துள்ளார். இதுதவிர, 2011ஆம் ஆண்டு தீவிர சிகிச்சை தொடர்பான மேல்படிப்பை படித்திருக்கிறார் ரிச்சர்டு ஜான் பேல். தற்போது, லண்டனில் மிகச்சிறந்த மருத்துவமனை என்று சொல்லப்படும் லண்டன் பிரிட்ஜ் மருத்துவமனையிலும் ஆலோசகராகப் பணி புரிகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவர் என பொதுவாக சொல்லப்பட்டாலும்கூட குறிப்பாக, இவர் நுரையீரலில் சீழ்பிடிப்பு மற்றும் நுரையீரலில் ஏற்படும் காயங்கள் , மல்டிபிள் ஆர்கன் பெயிலியர் எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளுறுப்புகள் செயலிழப்பது போன்ற பிரச்னைகளில் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். லண்டனில் இவரது அப்பாயின்ட்மெண்ட் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. மாதக்கணக்கில் இவரது அப்பாயின்ட்மெண்டுக்காக காத்திருப்பவர்கள்கூட உண்டு. The European Society of Intensive Care Medicine என்பது ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிகப்பெரிய மருத்துவ அமைப்பு. இதில் டாக்டர் ரிச்சர்டு ஜான் பேல், முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். பல்வேறு உலக நாடுகளில் சர்வதேச அளவில் நடந்த மருத்துவக் கருத்தரங்குகளில் டாக்டர் ரிச்சர்டு ஜான் பேல் ஆற்றிய உரைகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். ARDS (Acute respiratory distress syndrome) எனப்படும் கடுமையான மூச்சுத்திணறல் பற்றியும், அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் இவர் எழுதியுள்ள மருத்துவக் கட்டுரைகள் இங்கிலாந்தில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டு இருக்கிறது. கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு , தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பவர்களைப் பற்றியும் , அவர்களுக்கு அளிக்கப்படும் இன்சுலின் தெரபி பற்றியும் விரிவாக எழுதியும் பேசியும் வருபவர் ரிச்சர்ட் பேல். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் கொடுக்க வேண்டும்? என்ற கையேடு ஒன்றையும் பேல் எழுதியுள்ளார்.
செயின்ட் தாமஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் பெரியவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் 1995இல் இருந்து இன்றுவரை மருத்துவ இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளை 24 மணி நேரமும் மருத்துவர்களும், செவிலியர்களும் கண்காணிக்கும்படியான வீடியோ கேமராக்களை பொருத்தி , நோயாளிகளுக்கு என்ன பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவர்கள் கவனிக்கும்படி செய்துள்ளார். நோயாளிகள் உடல்நிலையில் ஏதாவது மாற்றம் என்றாலும் மருத்துவக் குழுவுக்கு தெரிந்துவிடும். இந்த லேட்டஸ்ட் கருவியை லண்டன் மருத்துவமனையில் 2 மில்லியன் செலவில் அமைக்கச் சொன்னவர் ரிச்சர்ட் பேலின் ஆலோசனையின் பெயரிலேயே மருத்துவமனை நிர்வாகம் அமைத்துள்ளது. இதுமாதிரியான பல நவீன மருத்துவ மாற்றங்களுக்கு வித்திட்டவர் மருத்துவர் ரிச்சர்ட் பேல்.
இதுபற்றி ரிச்சர்ட் பேல் தெரிவிக்கும்போது, ''மருத்துவத்தில் உள்ள எல்லா துறைகளைவிட தீவிர சிகிச்சைப் பிரிவு மிகவும் சிக்கல் வாய்ந்தது. தள்ளிப்போட்டால் மருந்துகள் பலனளிக்காமல் போய்விடும். நோயாளிகளின் தேவை உணர்ந்து மருத்துவர்களும், செவிலியர்களும் செயல்பட வேண்டிய துறை இது. இந்த கண்காணிப்புக் கருவியின் மூலம் மருத்துவர் குழு 24 மணி நேரமும் அலர்ட் ஆக இருக்க முடியும், இத்தகைய நவீன கருவிகளைப் பயன்படுத்துவதன்மூலம் நேரம் வீணாகாமல் சரியான நேரத்துக்குத் தேவையான சிகிச்சையை அளிக்கலாம் '' எனத் தெரிவிக்கிறார். இத்தனை சிறப்புகள் உள்ளதால்தான் அவரை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து பேசி வரவழைத்து இருக்கிறார்கள். தனி ஒருவருக்காக சிகிச்சை அளிக்க நாடு கடந்து ரிச்சர்ட் பேல் வந்திருப்பது இதுவே முதல்முறை. முதல்வரின் முக்கியத்துவம் உணர்ந்துதான் தனது வேலைகளை லண்டனில் ஒத்திவைத்துவிட்டு சென்னை வந்து சிகிச்சை அளித்து வருகிறார்.
ரிச்சர்ட் பேல் ஜெயலலிதாவுக்கு அளித்து வரும் சிகிச்சை விபரங்களை காலை பதிப்பில் சொல்கிறோம். மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக