கோவை: தென்மாநிலங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்த
திட்டமிட்டுருந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கேரளாவில் கைது
செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தமிழகத்தில் தங்கியிருந்ததும்
விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 21 பேர் அண்மையில் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர்களைக் கண்டறியும் பணியில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு, இவர்களை கைது செய்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஈர்ப்பில் இவர்கள் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை இவர்கள் சேகரித்ததாகவும், தென்இந்தியாவில் மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து தாக்க இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர் என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்பவர் சென்னையில் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணைக் காவலில் எடுக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ளவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு உதவியதாக இரண்டு பேரைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவையின் ஜி.எம். நகர் மற்றும் கோட்டைப்புதூர் பகுதிகளைச் சேர்ந்த அவர்களிடம் ஐஎஸ் பயங்கரவாத தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் சார்பாக விசாரணை நடைபெறுகிறது.
இதையடுத்து, மூன்று எஸ்.பி.,க்கள் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இரவில் மாநகர போலீஸ் படையினரின் உதவியுடன், சந்தேகத்துக்குரிய வீட்டை சுற்றிவளைத்தனர். அங்கிருந்த நவாஸ்(21) கைது செய்யப்பட்டான். இவன், அங்குள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் பி.எஸ்சி., படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவனிடம் இருந்து மொபைல் போன், 'லேப் டாப்' உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தினமணி.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக