திங்கள், 17 அக்டோபர், 2016

நயன்தாரா மீண்டும் கலக்க வரும் காஷ்மோரா

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திற்கு பிறகு இயக்குனர்
கோகுல், கார்த்தியுடன் இணைந்து 'காஷ்மோரா' படத்தை எடுத்து வருகிறார். முழுக்க முழுக்க பில்லி, சூனியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்...‘காஷ்மோரா’, ‘ராஜ்நாயக்’ மற்றும் இன்னொரு கதாபாத்திரம் என்ன என்பதை படம் வெளியாகும் வரை ரகசியமாக வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் கார்த்தியுடன் முதன்முறையாக நயன்தாராவும், ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், மிகப்பிரம்மாண்ட மான பொருட்செலவில், நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்டது.

அதில் பாகுபலி கட்டப்பா போன்ற கார்த்தியின் தோற்றம் கொண்ட போஸ்டர் ரசிகர்கள் மத்தில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் குறித்த புது புது தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருப்பதால்... படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த போஸ்டர் இன்று வெளியீடப்பட்டுள்ளது , ரத்னமஹாதேவி என்ற அந்த கேரக்டரில் 'நயன்தாரா' கம்பீரமாக அரியணையில் அமர்ந்து இருக்கிற காட்சி... ராணிக்கே உரிய தோற்றம் அவரிடம் தெரிகிறது.  நக்கீரன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக