செவ்வாய், 11 அக்டோபர், 2016

அதிமுக குளத்தில் மீன்பிடிக்க காங்கிரஸ் பாஜக கடும் போட்டி ?

தமிழகத்தில், தி.மு.க., - காங்., இடையேயான மோதல் முற்றுகிறது. ஜெ., நலம் விசாரிக்க, ராகுல், சென்னை வந்து சென்றதில் துவங்கிய மோதல், திருநாவுக்கரசரின் அதிரடி பேட்டி மூலம், பகிரங்கமாக வெடித்துள்ளது. பொறுப்பு முதல்வர் விஷயத்தில், ஸ்டாலின் கருத்துக்கு உடன்பட முடியாது என, திருநாவுக்கரசர் மூக்கறுப்பு செய்துள்ளார். இதனால், தமிழகத்தில், காங்., திசை மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராகுல் திடீரென வந்தார்.உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள, முதல்வர் ஜெயலலிதா, இரு வாரங்களாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்த்து உடல்நலம் விசாரிக்க, காங்., துணைத் தலைவர் ராகுல், திடீரென வந்தார். டெல்லியில் மூக்கறுபட்டு ஓரம் கிடந்த காங்கிரசை, 2004-ல் திமுக தான் தூக்கிப் பிடித்து 10 ஆண்டு காலம் நாட்டை ஆள வழிவகை செய்தது என்பது அரசியல் உண்மை. அப்போது பல கட்சிகளில் இருந்த சு.திருநாவுக்கரசர் போன்றவர்களுக்கு இந்த உண்மையை புலப்பட வைக்க வரலாற்று ஆசிரியர்கள் தேவை.


அதுமட்டுமின்றி, 'முதல்வர் ஜெயலலிதாவுக்கு, காங்., தலைவர் சோனியாவின் ஆதரவையும்,
என் ஆதரவையும் தெரிவிப்பதற்காகவே, இங்கு வந்தேன்' என, அப்பல்லோ பேட்டியில், ராகுல் கூறியிருந்தார்; அதுவும், அரசியல் வட்டாரத்தில், பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன் பின்னே, பா.ஜ., தரப்பில் இருந்து, மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் என, வரிசையாக வரத் துவங்கினர்.
இதற்கிடையில், தமிழகத்தில், அரசு நிர்வாகத்தை கவனிக்க, பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கருத்தை, தி.மு.க., முன்வைத்தது. அக்கட்சி பொருளாளர், ஸ்டாலின் வலியுறுத்திய இந்த கருத்துக்கு, மற்ற கட்சிகளிடத்தில் ஆதரவு கிடைக்கும் என, தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசே, அதற்கு உடன்பட மறுத்து விட்டது.

அவமானம்

ஏற்கனவே, உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீட்டில், தி.மு.க., மீது காங்., கடும் கோபத்தில் இருந்தது. இது தொடர்பாக பேச்சு நடத்த சென்ற திருநாவுக்கரசரை, தி.மு.க., தரப்பில் அவமானப்படுத்தி விட்டதாக, புகார் கூறப்படுகிறது.

'எங்களது மாவட்ட செயலர்களிடம் பேசிக் கொள்ளுங்கள்' என, ஸ்டாலின் கழற்றி விட்டதாகவும் தெரிகிறது. அந்த கோபத்தில் இருந்த தமிழக காங்கிரஸ், இப்போது திசை மாற விரும்புகிறது. அதன்வெளிப்பாடு தான், ராகுல் வருகை, திருநாவுக்கரசு மூக்கறுப்பு என்கிறது, காங்., வட்டாரம்.
சென்னையில், கவர்னர் வித்யாசாகர் ராவை, நேற்று, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். பின், திருநாவுக்கரசர் அளித்த பேட்டி:
;ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க, கவர்னர், தலைமை செயலர் ஆகியோர் உள்ளனர். அதனால், பொறுப்பு முதல்வர் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தில், ஸ்டாலின் ஒரு கருத்தை சொல்கிறார் என்பதற்காக, அதே கருத்தை, காங்கிரசும் ஏற்க வேண்டும் என்பதில்லை.
தி.மு.க.,வுடன் கூட்டணி என்பது, தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு கூட்டணி. முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இல்லை. எனவே, தி.மு.க., கருத்துடன் உடன்பட வேண்டும் என்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

அதே கருத்தை, பா.ஜ., தரப்பும் வெளிப்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அதன்பின், அவர் அளித்த பேட்டியில், ''பொறுப்பு முதல்வரை நியமிப்பது என்பது, அ.தி.மு.க., எடுக்க வேண்டிய முடிவு; அதில், வேறு யாரும் தலையிட முடியாது,'' என்றார்.
- நமது நிருபர் -  டிமனளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக