ஞாயிறு, 9 அக்டோபர், 2016

தினமலர் : முதல்வர் ஜெ., நலமாக இருக்கிறார்; கண் திறந்து பார்த்தார்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் கண் திறந்து பார்த்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கடந்த 22 ம் தேதி மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப் பட்டார். நுரையீரலில் நீர் கோர்த்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது என மருத்துவர்கள் முடிவு செய்து அதற்கேற்ப சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாசம்< />கடந்த செவ்வாய்கிழமை (அக்., 4) வரை காயச் சல் இருந்து வந்தது. மருத்துவர்கள் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக வென்டி லேட்டர் பொருத்தினர். இதன்மூலம் நுரையீர லுக்கும் இருதயத்திற்கும் அதிக பளு கொடுக்காமல் இருக்க செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நுரையீரலும் இருதயமும் சிரமமின்றி செயல்பட்டன. நுரையீரலில் ஏற்பட்ட தொற்றை குறைக்க முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல்வருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறு, நீரிழிவு நோய் இருந்ததால் அவருக்கு கவனமாக மருத்து வர்கள் சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.

லண்டன் டாக்டர் சிகிச்சை

இதற்காக, லண்டனிலிருந்து நுரையீரல் நிபுணர் டாக்டர் ரிச்சர்டு பில்லே வந்திருந்தார். அவருடைய ஆலோசனையின்படி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கு அப்பல்லோவில் கொடுக் கப்படும் சிகிச்சைகள் ஏற்றுக்கொண்ட லண்டன் டாக்டர் அதில் சில மாற்றங்கள் மட்டும் செய்துள் ளார். இன்று மாலை கூட ரிச்சர்டு முதல்வரை பரிசோதனை செய்துள்ளார்.
கண் திறந்து பார்த்தார்

வென்டிலேட்டரில் இருந்த நேரத்தில் தொற்று ஏற்படலாம் என்று கருதி முதல்வரை பார்க்க எவரையும் அனுமதிக்கவில்லை. வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டிருப்பதால் இயற்கை முறையில் உணவு எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அவ ரால் பேசவும் முடியாமல் இருந்தது. ஆனால், முதல்வர் சுயநினைவுடன் தான் இருக்கிறார். கண் திறந்துபார்த்தார்.
குழாய் மூலம் உணவு

வென்டிலேட்டரில் தொடர்ந்து இருந்தாலும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ‛டிரக்யா டோமி (Trechya Tomi) முறையில் குழாய் மூலம் இன்று (அக்., 8) வரை செயற்கை சுவாசம் கொடுக்கப் பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் அவருக்கு குழாய் மூலமே உணவு வழங்கப் படுகிறது மருத்துவர்கள் நம்பிக்கை< ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரி வித்துள்ளனர். இதேநிலை, நீடித்தால் இன்னும் ஒரு வாரத்திற்குள் முதல்வர் குணமடைந்து விடுவார் என நம்புகிறார்கள்.
முதல்வருக்கு சிகிச்சை அளிக்க வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (அக்.,7) திரும்பி சென்றனர். லண்டன் டாக்டர் ரிச்சர்டு உடன் இருந்து சிகிச்சை அளித்து வருகிறார். இவ்வாறு அப்பல்லோ மருத்துவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக