ஞாயிறு, 9 அக்டோபர், 2016

அரசின் ஸ்பெக்ட்ரம் ஏலம் படுதோல்வியில் முடிந்தது ... இவ்வளவு நாளாக 2G ஊழல் என்று ஏமாற்றிக்கொண்டிருந்தார்களா.

மும்பை: 'தொலைத்தொடர்பு சேவைக்கான, 'ஸ்பெக்ட்ரம்' ஏலத்தில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, குறைந்த தொகை கிடைத்துள்ள போதிலும், அதனால், மத்திய அரசுக்கு பாதிப்பு ஏதும் கிடையாது' என, ஜப்பானைச் சேர்ந்த, நோமுரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் விபரம்: மத்திய அரசு, சமீபத்தில் மேற்கொண்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், 99 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், 700 மெகாஹெர்ட்ஸ் பிரிவில் ஏலம் எடுக்க, எந்த நிறுவனமும் முன்வரவில்லை. ஏலத்தில், ஆரம்ப விலை, 11 ஆயிரத்து, 485 கோடி ரூபாய் என, அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது தான், இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மறைமுக வரி வருவாய்; அதனால், இதர அலைவரிசை ஏலம் மூலம், மத்திய அரசுக்கு, 67 ஆயிரம் கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது; இது, இலக்கு அளவான, 99 ஆயிரம் கோடி ரூபாயை விட, குறைவாகும்.
இதன் மூலம், 32 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வருவாய், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, அதிகமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நடப்பு 2016 - 17ம் நிதியாண்டில், ஏப்., வரையிலான ஐந்து மாதங்களில், மறைமுக வரி வருவாய், 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, பட்ஜெட் இலக்கான, 10 சதவீத வளர்ச்சியை விட அதிகம்.
இந்த கூடுதல் வருவாயுடன், கறுப்பு பணத்தை வெளிக்கொணரும், வருமான அறிவிப்பு திட்டம் மூலம், மத்திய அரசுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஸ்பெக்ட்ரம் ஏலம் தோல்வி அடைந்தாலும், அதனால், மத்திய அரசுக்கு பாதிப்பு ஏதும் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசு, சமீபத்தில் மேற்கொண்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், 99 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், 700 மெகாஹெர்ட்ஸ் பிரிவில் ஏலம் எடுக்க, எந்த நிறுவனமும் முன்வரவில்லை.தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக