சனி, 22 அக்டோபர், 2016

திருநாவுகரசுவின் அதிமுக ஆதரவுக்கு டெல்லியில் கிடைத்த டோஸ்!

""அரசியலில் லாபமடை யணும்னா அவமானங்களை தூசிமாதிரி தட்டிட்டுப் போகணும். ஒரே நேரத்தில் டெல்லிக்குப் போய் தனித்தனியா தலைவர்களை சந்திச்சிருக்காங்களே திருநாவுக்கரசரும், இளங்கோவனும்?'' ""காங்கிரஸ் மாவட்ட தலைவர் கள் கூட்டத்தைக் கூட்டிய திருநா வுக்கரசர், அதில் தி.மு.க. கூட் டணிக்கு எதிரான குரல் அதிகம்ங்கிற தகவலைச் சொல்ல, டெல்லிக்குப் போனார். அவருக்கு முன்பாகவே கலைஞரின் எண்ணங்கள் கனிமொழி மூலம் சோனியா காதுக்கு போயிடுச்சி. திருநாவுக்கரசர் தலைமை ஏற்றதற்குப் பிறகு, தி.மு.க.வுடன் இணக்கமா இல்லை. இதே நிலை நீடித்தால், புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு நாங்கள் கொடுத்துவரும் ஆதரவு பற்றி பரிசீலிக்க வேண்டியிருக்கும்னு சோனியாவிடம் சொல்லப்பட்டிருக்கு. சோனியாவோ, திருநாவுக்கரசர் கருத்தை பெருசா எடுத்துக்க வேணாம். நம்ம கூட்டணி உறுதியாவே இருக்குன்னு சொல்லிவிட்டார்.'அதன் பின் திருநாவுகரசுவுக்கு அங்கு நல்ல பாடம் நடப்பட்டது . இருந்தாலும் அவர் அங்கு இனி ஒரு சந்தேக கண்ணோடுதான் நோக்கப்படுவார் ?


 ' ""இளங்கோவன் எதுக்காக டெல்லிக்குப் போனாராம்?'' ""
இளங்கோவனுக்கு சோனியாவின் அப்பாயின்ட்மெண்ட் கிடைச்சிருக்கு. அவரோ, பழைய அ.தி.மு.க.காரராவே திருநாவுக்கரசர் நடந்துக்கறார்ன்னு சமயம் பார்த்துக் கூர் சீவியிருக்கார். அதனால் திருநாவுக்கரசருக்கு சோனியாவின் அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கப்படலை. அதேபோல் இளங்கோவன் ராகுலை சந்தித்தபோது, தி.மு.க. வோடு கூட்டணி நீடிக்குதுன்னு சொன்ன ராகுல், அதற்காக லகானை அவங்க கிட்டே கொடுத்துவிடக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு. இதையே திருநாவுக்கரசரிடமும் ராகுல் சொல்லியிருக்கிறார். தமிழக நிலவரத்தை பேலன்ஸ் செய்ய, இளங்கோவனை மாநில செயல் தலைவராக ஆக்கலாமா? இல்லை, அகில இந்திய அளவில் அவருக்குப் பொறுப்பைக் கொடுக்கலாமான்னு காங்கிரஸ் தலைமை இப்போது தாயம் உருட்டிக்கிட்டிருக்கு.'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக