சனி, 22 அக்டோபர், 2016

அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு .. காவிரி விவகாரம் .. ஐப்பசி 25 ..

இந்தக் கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் பெயருக்கு கடிதம் எழுதி தலைமைக் கழகத்துக்கு ஆள் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பப்பட்டது. ஆனால், அந்த கடிதத்தை அதிமுக தலைமை கழகத்தில் உள்ளவர்கள் வாங்க மறுத்து விட்டனர். இதனால் இன்று கூரியர் தபால் மூலம் அதிமுக தலைமைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை : காவிரி விவகாரம் தொடர்பாக அக்டோபர் 25ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திமுக தீர்மானித்துள்ளது. இதற்காக அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக அழைப்பு : காவிரி விவகாரம் தொடர்பாக அக்டோபர் 25ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பான அழைப்பு கடிதத்தை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாவிட்டால், திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ., பங்கேற்குமா? :

திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கட்டத்திற்கு பா.ஜ.,விற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினால் அதில் பா.ஜ., பங்கேற்காது எனவும், தமிழக அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மட்டுமே பா.ஜ., பங்கேற்கும் எனவும் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த வாரம் கூறி இருந்தார். இதனால் அக்டோபர் 25ம் தேதி திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை பா.ஜ., புறக்கணிக்கும் என கூறப்படுகிறது.
காங்., பங்கேற்கும் :

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், அக்டோபர் 25ல் ஸ்டாலின் நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டம், விவசாயிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும். முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் அவரது உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் வதந்தி பரப்புவது கண்டிக்கத்தக்கது. இவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போன்று பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளை பயன்படுத்துவோரின் செயல்பாடுகளையும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றார். தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக