வியாழன், 13 அக்டோபர், 2016

கர்நாடகா ,வாகனங்களை கழுவ 10 கோடி லி., காவிரி நதிநீர்.. ஆயுத பூஜையில் அடாவடி

பெங்களூரு: ஆயுத பூஜைக்கு வாகனங்களை கழுவ மட்டும், 10 கோடி லி., தண்ணீர் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதில், காவிரி நதி நீர் தான் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது ஆயுத பூஜையை முன்னிட்டு, வாகனங்களை தண்ணீரால் கழுவுவது வழக்கம். பெங்களூரில், 59.57 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில்,இரு சக்கரம் ,கார்கள் எண்ணிக்கை மட்டும், 53.66 லட்சமாகும். கடந்த திங்கட்கிழமை ஆயுதபூஜையன்று, பெங்களூரில் மட்டும், 45 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் சுத்தப்படுத்தப்பட்டன. இதற்கு, 10 கோடி லி., தண்ணீர்பயன்படுத்தப்பட்டுள்ளது.


காவிரி நதி நீர் பயன்படுத்தியவர்கள் தான் அதிகம் எனவும், சிலர், ஆழ்துளை கிணற்று தண்ணீரை பயன்படுத்தி யதும் தெரிய வந்துள்ளது.

தினமும், 135 கோடி லி., காவிரி தண்ணீர், பெங்களூ ருக்கு வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணற்றிலி ருந்து, 20 கோடி லி., தண்ணீர் எடுக்கப்படுகிறது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை இரு மடங்காகஇருக்கும்.
வாகனங்களை சுத்தப்படுத்த காவிரி நீரை மட்டும் பயன்படுத்துவதில்லை. சிலர் தொட்டி களில் சேகரித்து வைத்துள்ள தண்ணீரையும் பயன்படுத்து கின்றனர். காவிரி தண்ணீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்துமாறு அரசு, விழிப்புணர்வு நிகழ்ச்சி களை செய்துள்ளது. தண்ணீர் பிரச்னை பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தொடர் விடுமுறை வந்ததால், பலரும் குடும்பத்துடன் ஊருக்கு சென்றனர். இதனால், தண்ணீரின் பயன்பாடு குறைவாகவே இருக்கும்.
-கெம்பராமையா, நீர்வளத்துறை தலைமை இன்ஜினியர்  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக