திங்கள், 26 செப்டம்பர், 2016

அதிமுகவில் RSS ஸ்லீப்பிங் செல் மைத்ரேயன் அடுத்த முதல்வரா?

கேள்வி :- தனது கூலிப்படையினரை பிரியாணி பாய்ஸ் , செல்போன் திருடர்கள் என பொதுமக்கள் கேலி செய்வதைக்கண்டு ஆர்.எஸ்.எஸ்  வருத்தப்படுவார்களா? 
 பதில் :- கொஞ்சம் பதட்டமாகத்தான் இருக்கிறார்கள் ஆனாலும் தலைக்கு மேலே வெள்ளம் போனாலும் காரியத்தில் கண்ணாக இருப்பவர்கள் ஷாகா பாய்ஸ். நாக்பூர் மேலிடம் அவர்களுக்கு இட்டிருக்கும் உத்தரவு ஒருவேளை ஜெ.விற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தால் அதிமுகவில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல் டாக்டர் மைத்ரேயனை முதலமைச்சராக்க காய் நகர்த்தவேண்டுமாம். டாக்டர் மைத்ரேயன் இல்லாவிட்டால் குறைந்த பட்சம் மைலாப்பூர் எம்.எல்.ஏ ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ் ஆவது முதல்வராகவேண்டும் அதற்கான ஆயத்தவேலைகளில் ஈடுபடவேண்டும் என்று தமது சென்னைக்கிளை பதிப்பக ஊடக முதலாளிகளிடம் உத்தரவு போட்டிருக்கிறார்களாம். இதைக்கேள்விப்பட்ட சசிகலா தரப்பும் சசிகலா புஷ்பா தரப்பும் இவர்கள் சார்ந்த சமுதாயத்தினரும் ஆர்.எஸ்.எஸ் வேதவிற்பன்னர்கள் மேல் கடுமையான கோபத்தில் இருக்கின்றனராம். அமலாக்கப்பிரிவு வருமானத்துறை மூலம் எதிர்ப்பைக் காட்டும் இவர்களை சரிக்கட்ட முடியும் என்று நம்புவதால் படித்த டாக்டர் மைத்ரேயன் , ஐபிஎஸ் நட்ராஜ் போன்றவர்கள் தமிழக முதல்வராகவேண்டும் என்ற வியூகங்கள் விரைவாக வகுக்கப்படுகின்றன. இதற்கு பக்கவாத்தியம் காலச்சுவட்டிலோ கிழக்கு பதிப்பக மண்டப எழுத்தாளர்களின் கட்டுரைகளிலோ நாளைமுதல் வாசிக்கப்படலாம்.   முகநூல் பதிவு  கிளிமூக்கு அரக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக