வியாழன், 8 செப்டம்பர், 2016

மஹாராஷ்டிராவில் எஸ்.ஐ.,யை குளத்தில் தள்ளி கொல்ல முயன்ற RSS ரவுடிகள்


தானே: மஹாராஷ்டிரா மாநிலத்தில், விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட, போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தி, அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<>குளத்தில் கரைக்க ஏற்பாடு < மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி உள்ளது. இம்மாநிலத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தானே மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை குளத்தில் கரைக்க, நகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.   RSS ரவுடிகள்  தண்ணீரில கறைக்கிற நிகழ்ச்சியை மொதல்ல சட்டம் போட்டு நிறுத்தனும். அத அடிச்சி, தொவச்சி ,கால்லபோட்டு மிதிச்சி ரொம்ப கண்றாவி ?
'ஜாரி மாரி கணேஷ் மண்டலி' சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைக்க முயன்ற இளைஞர்கள், திடீரென தகராறில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

ஒழுங்குபடுத்த முயன்ற சப் - இன்ஸ்பெக்டர் டாக்லேவை, தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் கடுமையாக தாக்கினர். பின், நால்வரும் சேர்ந்து, டாக்லேவை குளத்தில் துாக்கி வீசினர்; பின், அவரை நீரில் மூழ்கடித்து கொல்ல முயன்றனர். எனினும், எஸ்.ஐ., டாக்லே சாதுரியமாக நீச்சலடித்து, அவர்களிடமிருந்து உயிர் தப்பினார்.

கொலைவெறி தாக்குதல் :
எஸ்.ஐ., தாக்கப்பட்ட வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவின. எஸ்.ஐ., மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலுக்கு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, எம்.என்.எஸ்., தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளனர். சிவசேனாவை சேர்ந்த அமைச்சர்களுடன், நேற்று, முதல்வர் பட்னவிசை சந்தித்த உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, எஸ்.ஐ., மீதான தாக்குதல் குறித்து, விசாரணை நடத்த, முதல்வர் பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட, நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக