வியாழன், 8 செப்டம்பர், 2016

விவசாயிகள் திருடர்கள் என்றால் மல்லையா யார்?-ராகுல் காந்தி!


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இரண்டாயிரத்து ஐநூறு கி.மீ தொலைவுக்கு மகா யாத்திரை ஒன்றை ‘விவசாயிகளுடன் யாத்திரை’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரமாக செய்து வருகிறார். உத்தரப்பிரதேச தேர்தலையொட்டி ராகுல்காந்தி இந்த பிரச்சாரத்தை தியோரியாவில் தொடங்கினார். ‘கட்டில் சபா’ என்ற பெயரிலான இந்த கூட்டம் முடிந்ததும், கூட்டத்துக்கு வந்தவர்கள் அமருவதற்காகப் போடப்பட்டிருந்த கட்டில்களை, போட்டி போட்டு தூக்கிச் சென்றனர். அப்போது கட்டில்களை எடுத்துச் செல்ல விவசாயிகள் மோதிக் கொண்டனர். இது விமர்சனங்களையும், கிண்டல்களையும் ஏற்படுத்தியது.

கோரக்பூரில் தனது யாத்திரையைத் தொடர்ந்த ராகுல் காந்தி, இது குறித்து பதிலளித்தார். அப்போது அவர், ‘‘விவசாயி ஒரு கட்டிலை தூக்கிச் சென்றால் அவர் திருடர் என அழைக்கப்படுகிறார். ஆனால், கோடிக்கணக்கான ரூபாயுடன் ஓடிவிட்ட விஜய் மல்லையா போன்றவர்களைக் கடனை திருப்பி செலுத்த தவறியவர்கள் என்கிறார்கள். கட்டில்களை எடுத்துச் சென்ற விவசாயிகள் திருடர்கள் என்றால் மல்லையா யார்?” என்று கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி. minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக