வியாழன், 15 செப்டம்பர், 2016

கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் .. ஓணம் மலையாளிகளின் வரலாறு ! அதை திரிக்க வேண்டாம்!

திருவனந்தபுரம்:கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணத்துக்கு, பா.ஜ.,
தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்த வாழ்த்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது; அவருக்கு, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவின் புகழ்பெற்ற அரசரான மகாபலியை நினைவுகூரும் வகையிலும், அவரை வரவேற்கும் வகையிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால், மகாபலியை வெல்ல, மகாவிஷ்ணு எடுத்த வாமன அவதாரத்தை குறிப்பிடும் வகையில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தன் வாழ்த்து செய்தியில், 'வாமன ஜெயந்தி திருநாள் வாழ்த்துக் கள்' என, குறிப்பிட்டார். அத்துடன், வாமன அவதாரம், தன் இடது காலால் மகாபலி மன்னரின் தலையில் கால் வைத்து, அவரை பாதாளத்துக்கு தள்ளுவது போன்ற படத்தையும், சமூக வலைதளங்களில் அமித் ஷா பதிவிட்டிருந்தார். திராவிட மாகாபலி அரசனுக்கு வாமணன் என்ற வடநாட்டான் தலையில் கால் வைத்து முக்தி கொடுத்தானாம் .. முள்ளி வாய்க்காலிலும் இப்படிதான் முக்தி கொடுத்தாங்கன்னு  இந்த பன்னாடைங்க இனி  சொல்லுவாய்ங்களோ?


இதற்கு, கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'நாங்கள் வாமனரை ஒருபோதும் வழிபட்டது இல்லை' என, சமூக வலைதளங் களில் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனும், அமித் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

''மனித நேயத்தையும், அன்பையும் உணர்த்தும் வகையில், கேரள மக்கள் அனைவரும்,எவ்வித பேதமும் இல்லாமல் கொண்டாடும் இந்நாளில், கேரள மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமித் ஷாவின் செய்தி அமைந்துள்ளது,'' என, பினராயி விஜயன் கூறினார்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இதழில் சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரையில், 'மகாபலியை வாமனன் வென்ற நாளே ஓணம்' என்று குறிப்பிடப்பட்டது; இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஓணம் பண்டிகை, உயர் ஜாதிக்கு மட்டுமானது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, அமித் ஷா முயற்சிக்கிறார். மகாபலியின் வருகையை கொண்டாடும் ஓணம் பண்டிகையின் வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சியை, கேரள மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

-ரமேஷ் சென்னிதலா கேரள எதிர்க்கட்சி தலைவர், காங்., தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக