வியாழன், 15 செப்டம்பர், 2016

கர்நாடக கலவரம் ... மோடியின் நீண்ட மௌனம்...... சூத்திரதாரியே அவருதான் / பாஜாகாதான் !

கன்னடர் மீது தாக்குதல்; தமிழன விரோத தாக்குதலே நீங்க அடிச்ச கன்னடக்காரர், ‘தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டிப்பவராகவும், தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டும்’ என்ற கண்ணோட்டம் கொண்டவராகவும் இருக்கலாம்.

கன்னடர் மீது தாக்குதல்; தமிழன விரோத தாக்குதலே
*
‘தமிழர்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்களை நிறுத்துவதற்கு இங்கு வருகிற கன்னடர்களைத் தாக்கினால் நிறுத்தலாம்’ என்று தமிழகக் கன்னடர்கள் மீதும் அவர்கள் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.
அதன் பிறகு இரண்டு நாளில் தமிழர்கள் மீதான வன்முறை பலமடங்கு கூடியிருக்கிறது. பெங்களுரில் இருந்து கர்நாடகம் முழுவதும் பரவியிருக்கிறது.

இந்தத் தாக்குதல், தமிழன விரோதம் கொண்ட கன்னட இனிவெறியர்களின் ஈனச் செயலை நியாயப்படுத்தி அதைத் தீவரமாக்கிக் கொள்வதற்குக் காரணமாகியிருக்கிறது.
தமிழக கன்னடர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலும், தமிழன விரோத தாக்குதல்தான்.
13 September
தமிழர்கள் மீதான வன்முறை; மோடியின் மவுனம் – மவுனம் சம்மதம்.
*
‘தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கண்டிக்க கூடியது’ என்று பாஜக பிரமுகர்கள் பேசுகிறார்கள்.
கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடக்கும் தொடர் வன்முறையை, தமிழகத்தில் கன்னடர்கள் மீது நடந்த மூன்று, நான்கு சம்பவங்களோடு தொடர்புபடுத்தி இணையாக பேசுவது மோசடியானது. தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதலை நியாயப்படுத்துவது.
தமிழர்கள் மீது வன்முறை நடத்தி, தூண்டிவிட்டு சித்தராமையா ஆட்சியை அகற்ற பாஜகவின் பின்னணி சதியையே இந்த வார்த்தைகள் அடையாளம் காட்டுகிறது.
மோடியின் மவுனம் அதை உறுதி செய்கிறது.   mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக