செவ்வாய், 13 செப்டம்பர், 2016

தமிழர்கள் மீது கேரள போலீஸ் தடியடி தடுத்த தமிழக அதிகாரிகளுக்கும் அடி

பொள்ளாச்சி: தமிழக - கேரள எல்லையில் உள்ள பரம்பிக்குளத்தில், பள்ளிக்கு செல்ல வாகன வசதி கோரிய தமிழர்கள் மீது கேரள போலீசார் தடியடி நடத்தினர். தடுக்க முயன்ற, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் அடி விழுந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள கேரள எல்லைக்குள்,
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் அணை, துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் உள்ளன.பரம்பிக்குளம் பகுதி பள்ளி மாணவ, மாணவியருக்காக, பொதுப்பணித்துறை சார்பில் வேன் இயக்கப்படுகிறது. இரு நாட்களுக்கு முன், இவ்வாகனத்தை இயக்க கேரள வனத்துறை தடை விதித்தது. இதையடுத்து, மாணவர்களும், பெற்றோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த கேரள போலீசார் தடியடி
நடத்தினர்.   தமிழர்களை கன்னடம்மலையாளம் ,தெலுங்கு பேசும் மக்கள் (மாக்கள் ) அடிக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஏன் இன்னமும் தமிழில் இருந்து பிரிந்து போன மொழிகளை பேசுகிறார்கள் .தமிழனை பிடிக்காது .ஆனால் அவன் உருவாக்கி கொடுத்த மொழி மட்டும் ஏன் இனிக்குது.அவர்களுக்கென்று ஏன் ஒரு மொழியை உருவாக்கிக்கொள்ளவேண்டியதுதானே


கேரளாவிலிருந்து வந்த அதிரடிப் படையினரும், மக்களை விரட்டி விரட்டி அடித்தனர்; சிறுவர்களை கண்மூடித்தனமாக
தாக்கினர். மக்களிடம் பேச்சு நடத்திக் கொண்டிருந்த பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கும் அடி விழுந்தது. காயமடைந்த பெண்கள் உள்ளிட்டோர், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதை அறிந்த கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
உதவிசெயற்பொறியாளர் கருணாகரன் கூறுகையில், ''பேச்சுக்கு அழைத்தனர்; வந்ததும் எங்களையும் தாக்கி விட்டனர்,'' என்றார்.
பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் கூறுகையில், ''பேச்சு நடத்த வந்த அதிகாரிகளை அடிப்பது கொடூரம். பரம்பிக்குளம் அணையில் பராமரிப்பு பணிகளை பார்வையிட வந்த அதிகாரிகளை அனுமதிக்க மறுக்கின்றனர்; தாக்குதலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். யார் இந்த அதிகாரி: />கேரள மாநிலம், பரம்பிக்குளம் மாவட்ட வன அலுவலர் ரஞ்சன்குமார், கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்தவர். இவர், தமிழர்கள் மீதும், தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் மீதும் வெறுப்புடன் நடந்து கொள்வதாக மக்கள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய கேரள போலீசை கண்டித்து, பொள்ளாச்சி பேருந்துநிலையத்தில், கேரள பஸ்சை மறித்து, சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள் எதிர்காலம்? :
மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'காலாண்டு தேர்வு நடக்கும் நிலையில், பள்ளிக்குச் செல்ல வாகனம் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டோம். திடீர் தாக்குதலில் ஈடுபட்ட கேரள போலீசார், தமிழக பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளரையும் இழுத்துப் போட்டு அடித்தனர்' என்றனர். சம்பவ இடத்துக்கு வந்த, கேரள மாநிலம், நெம்மாறா எம்.எல்.ஏ., பாபு, இருதரப்பினருடனும் பேச்சு நடத்தினார்.
அதன்பின் அவர் கூறுகையில், ''பேசி தீர்க்க வேண்டிய விஷயத்தை, போலீசார் தடியடி நடத்தி பிரச்னையாக மாற்றிவிட்டனர். உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை முடிந்து, வாகனம் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
போக்குவரத்து நிறுத்தம் :
பரம்பிக்குளத்தில் தமிழர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, தமிழக - கேரள எல்லை பகுதிகள் வழியே இரு மாநில போக்குவரத்து தடைபட்டு உள்ளது  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக