செவ்வாய், 13 செப்டம்பர், 2016

பரிசுத் தொகையில் படித்த பள்ளிக்கு 30 லட்சத்தை அளிக்கிறார் ஒரிஜினல் சுப்பர் ஸ்டார் தங்கவேலு மாரியப்பன்

625-0-560-350-160-300-053-800-668-160-90
வே.மதிமாறன்: சாட்டைச் சொடுக்கிய மாரியப்பன்...
அந்த நேரம் நெருக்கடியிலிருந்து தப்பிக்க ‘நதி நீர் திட்டத்துக்கு ஒரு கோடி கொடுப்பேன். கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் கொடுப்பேன். என் பொண்ணு கல்யாணத்திற்கு ரசிகர்களுக்குப் பிரியாணி போடுவேன்’ என்று திரைக்குவெளியேயும் ‘தர்மதொறை’ மாதிரி வசனம் பேசி விட்டு பச்ச தண்ணிக்கூடக் கொடுக்காமல்,
அடுத்தப் படத்தின் வெளியீட்டின் போதும் ஈவு இரக்கமே இல்லாமல் கூலி வேலை செய்கிற தன் ரசிகர்களை கொள்ளையடித்துக் கோடிகளைக் குவிக்கிற நடிகர்களையும் அம்பலப்படுத்துவது போல்
தங்கம் வென்ற மாரியப்பன் தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையிலிருந்து ரூ.30 லட்சத்தை அவர் படித்த பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு அளிப்பேன் என்று அறிவித்துள்ளார்.


அவர் தங்கம் வாங்கிய சாதனையையே பின்னுக்குத் தள்ளிவிட்டது அவரின் சமுக உணர்வு.
தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய மாணவர்களின் கல்வியைத் தகர்க்கும், அரசு பள்ளிகளை இடித்துத் தள்ளும் திட்டம்போல் ‘புதிய கல்விக் கொள்கை’ என்று பெயரில் வருகிற பா.ஜக. அரசின் கொடூர திட்டத்திற்கு எதிராக,
தன்னையறியாமல் மாரியப்பன் சொடுக்கி இருக்கிற சாட்டை இந்த ரூ. 30 லட்சம். நன்றி மாரியப்பன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக