செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்யும்படி முதல்வர் கேட்டுக்கொள்ளவில்லை.....?

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கும் ஆலைகளால் விவசாயம் அழிந்து விட்டது. விவசாயம் சார்ந்த தொழில்களும் நலிந்து விட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
மத்திய கல்வி வாரிய புத்தகத்தில் (சி.பி.எஸ்.இ.) 9-ம் வகுப்பு பாடத் திட்டத்தில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தி அவதூறாக உள்ளது. அந்தப் பகுதியை நீக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படவில்லை. மாநிலங்களவையில் இது தொடர்பாக நான் குரல் கொடுப்பேன்.
முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. அவர் என்னைவிட வயதில் மூத்தவர். அவர் விரைவில் குணம் அடைய வேண்டும்.
எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதாவின் பின்னால் இருப்பவர்கள்தான் கூறுகின்றனர். முதல்வர் ஜெயலலிதா நேரில் என்னிடம் கேட்டுக் கொண்டால், எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்"

என்று இன்று தெரிவித்த பேட்டியில் கூறி உள்ளார் Sasikala Pushpa


முகநூல் பதிவு  :ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதாவின் பின்னால் இருப்பவர்கள்தான் கூறுகின்றனர். முதல்வர் ஜெயலலிதா நேரில் என்னிடம் கேட்டுக் கொண்டால், எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்ய தயாராக "
என்று சொன்னதின் மூலம் சசிகலா புஷ்பா தான் ஒரு தேர்ந்த அரசியவாதி என்று நிரூபித்து உள்ளார் .. A good leader should retract and attack .. this they call as entrapment .. Now Sasikalapuspha entrapping #jayalalitha
1) ஜெயலலிதா ஆசைப்பட்டாலும் நேரிலே அவரால் சொல்ல முடியாது .. அவரின் ஈகோ அப்பிடி .. :)
2) //என்னைவிட வயதில் மூத்தவர். அவர் விரைவில் குணம் அடைய வேண்டும்// தொண்டர்களுக்கு after #Jayalaithaa it is me என்ற மெசேஜ் கொடுத்தாச்சு .. ;)
3) இன்று #அதிமுக வில் மீடியாவில் பேசும் ஒரே நபர் என்ற பெருமை வேறு தட்டி செல்கிறார் .. :P
#advantage #sasikalapuspa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக