புதன், 14 செப்டம்பர், 2016

கேரளா : ஓணம் .. இந்துத்வா அரசியலை புகுத்தும் பாஜக / ஆர்எஸ்எஸ்... திராவிட சக்கிரவர்த்தி மகாவலி..

theekkathir.in : மாவேலி மன்னரின் ஆட்சியின் கீழ் மக்கள் சமத்துவத்தையும் அனுபவித்தனர். அப்போது எந்தச்சுரண்டலும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் நமது புராணங்களில் அசுர பூதங்களாகவே சித்தரிக்கப்பட்டனர். மாவேலி மன்னர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சித்தரிக்கப்படுகிறார். தற்போது ஆர்எஸ்எஸ்ஸின் நடவடிக்கை தலித் ஆட்சியாளரின் சாதனைகளை வரலாற்றிலிருந்து நீக்கி விட்டு உயர் வர்க்கத்தை தெய்வீகத் தன்மை உள்ளவர்களாக காட்ட முயற்சிப்பதுதான். இது அவர்களின் வழக்கமான உத்தியாகும்
திருவனந்தபுரம், செப்.13- கேரளத்தின் ஓணம் பண்டிகை தொடர்பான வரலாற்றில் இந்துத்துவ மதவெறி அரசியலைப் புகுத்தி மக்களைப் பிளவுபடுத்தத் திட்டமிடும் ஆர்எஸ்எஸ் கும்பலின் வக்கிர புத்தியை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் அனைத்து சமயமக்களும் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், ஆர்எஸ்எஸ் மதவாதக் கும்பல் தனது வழக்கமான விஷம வேலையைத் தொடங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசரி இதழில், வாமண அவதாரம் எடுத்ததைத் தான் ஓணம் பண்டிகையாக கொண்டாட வேண்டுமே தவிர, அசுர
மன்னன் மாவேலி, நாட்டு மக்களைச் சந்திப்பதை அல்ல என்று மக்களுக்கு மதவாத போதனை அளித்துள்ளது. உண்மையில் ஓணம் கொண்டாடப்படுவதன் பின்னணியில் சாதி மத வேறு
பாடுகளைக் களைந்து மனிதர்கள் அனைவரும் மனதால் ஒன்றுபடுவது வழக்கமாக உள்ளது. இப்படி மக்கள் ஒன்றுபடுவதுதான் ஆர்எஸ்எஸ் கும்பலின் கண்களுக்கு உறுத்தலாக உள்ளது.
மேலும் ஓணம் குறித்த ஐதீக வரலாற்றிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் செய்தி உள்ளதும் இக்கும்பலுக்கு பெரும் தலைவலியைத் தருவதாக
உள்ளது. ஓணம் குறித்த வரலாற்றுப் பின்னணி குறித்து தேசாபிமானி
யின் ரெசிடென்சியல் எடிட்டர் பிரபா வர்மா கூறியுள்ளதாவது;  சாதாரண நாட்களில் தெய்
வங்களை வாழ்த்தி வழிபடும் மக்கள் இந்த ஒரு நாள் மட்டும் தெய்வத்தை மறந்து, அந்த தெய்வத்தினால் மிதிக்கப்பட்டு பாதாளத்திற்கு இறக்கப்பட்ட ஒரு அசுரச் சக்கரவர்த்தியை ஆராதிக்கிறார்கள். தெய்வத்திற்கு பதிலாக அசுரச் சக்கரவர்த்தியை ஆராதிக்கும் நாள் உலகில் எங்கும் கொண்டாடப்படுவதில்லை. சமூகத்திலிருந்து தள்ளி நிறுத்தப்படும் மக்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் தரும் செய்தி இதில் அடங்கி உள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிக்கு முக்கியத்துவம் அளிப்பதை இந்துத்துவா கும்பலால் பொறுத்துக்கொள்ள முடியுமா என்ன ? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாவேலி மன்னர், தெய்வத்தின் வரம் பெற்று மக்களைச் சந்திப்பது என்பது இந்த கும்பலுக்கு சகித்து கொள்ள முடியாததாக உள்ளது என்பதால் அந்த ஒடுக்கப்பட்ட வரலாற்றை மாற்றி பழைய உயர் வகுப்பினரின் வரலாற்றை கொண்டுவர முயற்சிக்கின்றனர் என்று அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.
“மாவேலி மன்னரின் ஆட்சியின் கீழ் மக்கள் சமத்துவத்தையும் அனுபவித்தனர். அப்போது எந்தச்சுரண்டலும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் நமது புராணங்களில் அசுர பூதங்களாகவே சித்தரிக்கப்பட்டனர். மாவேலி மன்னர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சித்தரிக்கப்படுகிறார். தற்போது ஆர்எஸ்எஸ்ஸின் நடவடிக்கை தலித் ஆட்சியாளரின் சாதனைகளை வரலாற்றிலிருந்து நீக்கி விட்டு உயர் வர்க்கத்தை தெய்வீகத் தன்மை உள்ளவர்களாக காட்ட முயற்சிப்பதுதான். இது அவர்களின் வழக்கமான உத்தியாகும்” என்றும் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக