புதன், 7 செப்டம்பர், 2016

கர்நாடகாவில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை எரித்து போராட்டம்


உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனை கண்டித்து கன்னட அமைப்பினர் தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின்போது ஜெயலலிதா உருவப்படத்தை எரித்தும், கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா மற்றும் மத்திய அரசுக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். -வடிவேல் நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக