ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது : ராம்குமார் தந்தை குற்றச்சாட்டு!

சுவாதி கொலைவழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், இன்று சிறையில் உள்ள மின் கம்பியை பிடித்து கடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும்,  அவரது தற்கொலை முயற்சியை சிறை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தி ராம்குமாரை  ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாகவும் போலீஸ் தகவல்.;மரணம் அடைந்த ராம்குமார் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  நாளை பிரேத பரிசோதனை நடைபெறவிருக்கிறது.  இதை முன்னிட்டு ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கொலையா? தற்கொலையா? என்கிற ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து பல மர்ம முடிச்சுகளை புழல் சிறை மூடி மறைப்பதாக  சந்தேகம் எழுந்திருக்கிறது.இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவம், ராம்குமாரின் மரணம் குறித்து, ‘’ராம்குமாருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.  நீங்கள் வரவேண்டும் என்று மட்டுமே போலீஸ் முதலில் என்னிடம் கூறியது.  பின்னர், ராம்குமார் இறந்துவிட்டதாக கூறியது.  என் மகன் ராம்குமாரை போலீஸ் விசம் கொடுத்து கொன்றுவிட்டது’’ என்று கூறியுள்ளார்.  அவர் மேலும், ராம்குமாரை கைது செய்த போதும்,  வீட்டிற்கு பின்புறம் அழைத்துச்சென்று, கழுத்தை அறுத்து, என் மகனே கழுத்தை அறுத்துக்கொண்டதாக போலீஸ் கூறியது’’ என்றும் தெரிவித்துள்ளார்.>ராம்குமாரின் தந்தை பரமசிவம் மற்றும் உறவினர்கள் சென்னைக்கு புறப்பட்டு வருகின்றன நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக