செவ்வாய், 13 செப்டம்பர், 2016

காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்

thetimestamil.com :திருமுருகன் காந்தி< பெங்களூரில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் கோக், பெப்சி ஆலைகளுக்கு கொடுக்கப்படுகிறது. 4000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் மைசூரில் அமைக்கப்பட இருப்பதற்கு 7 டி.எம்.சி தண்ணீர் காவேரியில் இருந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. கர்நாடகம் தண்ணீரை தனியார் மயமாக்கிய முன்னணி மாநிலம். பெங்களூரில் தண்ணீர் தனியார் மயத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு வெகுநாட்களாகிறது, மைசூர் தனியார் தண்ணீர் திட்டம் வெகுமக்களால் எதிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டொரு வருடத்திற்கு முன் அமெரிக்க தண்ணீர் விநியோக நிறுவனங்களின் சொந்தக்காரர்கள், அதிகாரிகள் கர்நாடக முதல்வரை நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. உலக வங்கியும், ஐ.எம்.எஃபும் பின்னிருந்து இயக்குகின்றன.
6.1 கோடி கன்னட மக்களுக்கான அணை நீர் சேமிப்பின் கொள்ளளவு 704 டி,எம்.சி அதே நேரம் 7.4 கோடி தமிழகத்தின் மக்கள் தொகைக்கான அணை நீர் கொள்ளளவு 190 டி.எம்.சி…. இதில்50% காவேரியில் கிடைக்கிறது…
கர்நாடகத்தில் ஏழில் ஒரு பங்கு மட்டுமே காவேரியிலிரிந்து கிடைக்கிறது…. 100 டிஎம்.சியில் 2 கோடி தமிழனுக்கான குடிநீர் , விவசாய நீர் கிடைக்கிறது. அதாவது மூன்றில் ஒரு பங்கு தமிழக மக்களுக்கு கிடைக்கிறது…
… இந்த கலவரம் கர்னாடக கார்ப்பரேட் அரசினால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது.. அரசின் ஆதரவில்லாமல் கலவரங்கள் பரவுவது சாத்தியமில்லை.
இந்த தனியார் மயத்தின் சொந்தக்காரனாக இருக்கும் பாஜக காங்கிரஸ் ஆகிய இருவரும் இந்தக் கலவரத்தின் பின்னால் இருந்து இயக்கும் சக்திகள்.
இதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய இந்துத்துவ கும்பல்கள் இந்த வன்முறையை குஜராத்தைப் போன்று திட்டமிட்டு தமிழர்கள் மீது நடத்துவதாக பல தோழர்கள் பெங்களூரில் இருந்து பகிர்கிறார்கள்.
இந்தக் கலவரத்தின் போது வெளியூர் சென்றிருக்கும் மோடிக்கு தெரியாமல் இந்தக் கலவரம் நடக்க வாய்ப்பில்லை. உள்துறை அமைச்சர் என்ன செய்கிறார்? ஏன் அவர் இன்னும் கர்நாடகத்திற்கு நெருக்கடி தரவில்லை?.. கர்நாடகத்தில் நடக்கும் கலவரத்தினை கண்டித்து ஏன் மத்திய அரசு அறிக்கை வெளியிடவில்லை?.. ஏன் தமிழக பார்ப்பன கும்பல்கள் அமைதி காக்கின்றன?…
தமிழர்களின் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் தமிழர்களின் உடமைகளே பெரிதும் வேட்டையாடப்படுகின்றன. அப்பாவிகள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவது கர்நாடக அரசிற்கு தெரியாமல் நடக்கவில்லை.
இந்தத் தனியார்மய சந்தையில் தமிழகத்தின் பெரும் கட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்பதை எப்படி மறுத்துவிட முடியும். கடுமையான எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் எழாமல் எனவே இந்த வன்முறை தற்போது நிறுத்தப்பட சாத்தியமில்லை.
திருமுருகன் காந்தி, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக