ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

ராஜ்குமாரின் மகன்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படலாமா?: வி.சி. குகநாதன்

How can Rajkumar's sons protest against TN?: VC Guhanathan சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை பேடர கண்ணப்பா என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவர் தமிழர் ஏவி.எம். அப்படி இருக்கும்போது ராஜ்குமாரின் மகன்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படலாமா? தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லலாமா? என தயாரிப்பாளர் வி.சி. குகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கன்னட திரையுலகினரும் கலந்து கொண்டு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

போராட்டத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன்களும் நடிகர்களுமான சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடிகார மனிதர்கள் விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளரான வி.சி. குகநாதன் பேசுகையில்,
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை பேடர கண்ணப்பா என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவர் தமிழர் ஏவி.எம். அப்படி இருக்கும்போது ராஜ்குமாரின் மகன்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படலாமா? தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லலாமா? என்றார். tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக