ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

கருணாஸ் நடிகர்சங்க பதவியில் இருந்து விலகினார் ... மந்திரி ஆகணும்ல?

Karunass resigns his Nadigar Sangam post?
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் விலகி விட்டதாக தகவல்கள் வருகின்றன. தனது ராஜினாமா கடிதத்தை சங்க நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
நடிகர் சங்க செயல்பாடு குறித்து அதிருப்தி அடைந்து அவர் பதவி விலகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா நடிகர் சங்கம் மீது கடும் கோபத்துடன் இருப்பதால்தான் கருணாஸ் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது அமெரிக்க அதிபர் தேர்தல் கூட இந்த அளவுக்கு பரபரப்பாக நடந்திருக்காது என்று கூறும் அளவுக்கு நடந்தது நடிகர் சங்கத் தேர்தல். இதில் சரத்குமார் அணிக்கும், நாசர் - விஷால் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பும் சூடான வார்த்தைச் சண்டைகளிலும் இறங்கினர். வாக்கெடுப்பு தினத்தன்று அடிதடியும் கூட அரங்கேறியது.
விஷாலை அடித்து விட்டதாக விஷால் தரப்பு செய்தியும் பரப்பியது.
நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், துணைத் தலைவராக கருணாஸ், பொருளாளராக கார்த்தி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சரத்குமார் அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
இந்தத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு நாசர் - விஷார் தரப்புக்கு இருந்தது. சரத்குமார் அணியை ஜெயலலிதா முழுமையாக கை விட்டு விட்டார். இதனால்தான் அவர் தோல்வி அடைய நேரிட்டது. இருப்பினும் சரத்குமார் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து அதிமுக கூட்டணியில்தான் அவர் இருக்கிறார்.
ஆனால் தேர்தலுக்குப் பிறகு முற்றிலும் ஜெயலலிதாவை விட்டு நடிகர் சங்கம் விலகிப் போக ஆரம்பித்து விட்டதாக சொல்கிறார்கள். நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தலுக்கு முன்பு கோரிக்கையாக வைத்திருந்தார். முதல்வர் ஜெயலலிதாவும் கூட இதே கோரிக்கையை தன்னை சந்தித்த நாசர் - விஷால் குழுவிடம் கூறியிருந்தாராம்.
ஆனால் இந்தக் கோரிக்கையை நடிகர் சங்கம் கண்டு கொள்ளவே இல்லையாம். அதெல்லாம் சாத்தியம் இல்லை என்று அவர்கள் தங்களுக்குள் பேசி் கொண்டது முதல்வர் காதுக்குப் போய் அவர் கோபமாகி விட்டாராம்.
மேலும் நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரி்க்கெட் நேரடி ஒளிபரப்பை சன் டிவிக்கு பெரும் தொகைக்கு நடிகர் சங்கம் தூக்கிக் கொடுத்ததும் ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தி விட்டதாம். இப்படி சின்னச் சின்னதாக சேர்ந்த அதிருப்தி தற்போது பெரும் கோபமாக மாறியுள்ளதாம். இதை நடிகர் சங்கமும் உணர்ந்துள்ளது. இதனால் அவர்கள் தற்போது திமுக தரப்பை நோக்கி நகரத் தொடங்கி விட்டதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில்தான் கருணாஸ் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் நடிகர் சங்கத்திற்குள் பெரும் புயல் வீசும் என்றும் பேச்சு அடிபடுகிறது. அதன் முதல் கட்டம்தான் வாராஹி வழக்கு என்றும் பேசப்படுகிறது.   tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக