வியாழன், 29 செப்டம்பர், 2016

விற்பனையை நிறுத்திய ஆடி நிறுவனம்!



மின்னம்பலம்.காம் : ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் தரியாரிப்பு நிறுவனமான வோல்க்ஸ்வாகன், ஆடி, பென்ட்லீ, புகாட்டி, ஃபோர்ஸ், லம்போர்கினி என பல பிராண்டுகளில் கார்களை தயாரித்து வருகிறது.
இந்தியாவில் Q5 மாடல் கார்களின் விற்பனையை ஆடி நிறுவனம் நிறுத்தியுள்ளது. ஆடி Q5 கார்களில் புகை அளவு அதிகளவில் இருப்பதை ’இந்திய ஆட்டோமேட்டிவ் ஆராய்ச்சி கூட்டமைப்பு’ (ARAI) கண்டறிந்ததையடுத்து ஆடி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
Q5 கார்களுக்குக்கான சோதனையை ARAI மேற்கொண்ட போது, இந்த கார்களில் நைட்ரோஜென் ஆக்ஸைடின் அளவு அதிகளவில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆடி, இந்தியாவில் தனது Q5 கார்களின் விற்பனையை நிறுத்தியுள்ளது.

இதைப்பற்றி ஆடி இந்தியாவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”நாங்கள் ஆடி Q5 மாடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை பற்றி விசாரணை மேற்கொண்டு அதை சரி செய்துள்ளோம். தற்போது மீண்டும் Q5 கார்களை சோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். ARAI நடத்திய சோதனையில் Q5 கார்கள் வரம்புக்குள் இருந்தன. இதையடுத்து நாங்கள் Q5 கார்களுக்கான அனுமதியை பெரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்" என்றார். எனவே விரைவில் ஆடி Q5 விற்பனை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வோல்க்ஸ்வாகன் நிறுவனம் புகை சோதனையில் ஏமாற்றும்விதமாக, தனது கார்களில் புகை அளவை குறைக்கும் உபகாரணங்களை பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் சென்ற ஆண்டு மத்திய அரசு வோல்க்ஸ்வாகன் நிறுவனம் மீது விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து சென்ற ஆண்டு ஆடி,ஸ்கோடா மற்றும் வோல்க்ஸ்வாகன் நிறுவனங்களின் 3,23,700 கார்களை வோல்க்ஸ்வாகன் திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக