செவ்வாய், 13 செப்டம்பர், 2016

நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்


காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும்
தாக்குதலை கண்டித்தும், தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் கர்நாடக வன்முறையாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசு உடனே தலையிட்டு கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும் அவர்களின் சொத்துக்களூக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி இன்று மதியம் ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் உள்ள கர்நாடக வங்கியின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளான தமிழ்க்குமரன் , சோதிவேல் தலைமையில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஈரோடு போலீசார் கை து செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர். தொடர்ந்து ஈரோட்டில் பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் கர்நாடக நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. - ஜீவா தங்கவேல்  நக்கீரன்,இன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக