புதன், 28 செப்டம்பர், 2016

சர்கரையின் அளவு 804? இருக்கையில் மயங்கிச் சாய்ந்திருந்த அவரைப் பார்த்து சசிகலா அலறிவிட்டார்.

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவரது ஆட்சியின்கீழ் வாழும் சராசரி மக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால் போயஸ் கார்டன் முதல் அப்பல்லோ மருத்துவமனை வரை நடந்தவற்றை அறிந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசினோம். பெயர் வெளியிட வேண்டாம் என வலியுறுத்திச் சொன்னவர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இது.;22-ந்தேதி வியாழன் மாலை ஏழுமணிக்கு தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் அவசர அவசரமாக போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார். அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன் முன்னிலையில் காவிரி பிரச்சினை தொடர்பாகவும் சசிகலா புஷ்பா விவகாரத்தையும் ஜெ. பேசிக் கொண்டிருக்கும் போதே, நெஞ்சு எரிவதாகவும் வயிறு வலிப்ப தாகவும் சசிகலாவை கூப்பிட்டு சொன்னார். " தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அவரது ஆட்சியின்கீழ் வாழும் சராசரி மக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால் போயஸ் கார்டன் முதல் அப்பல்லோ மருத்துவமனை வரை நடந்தவற்றை அறிந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசினோம். பெயர் வெளியிட வேண்டாம் என வலியுறுத்திச் சொன்னவர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இது. 22-ந்தேதி வியாழன் மாலை ஏழுமணிக்கு தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் அவசர அவசரமாக போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார். அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன் முன்னிலையில் காவிரி பிரச்சினை தொடர்பாகவும் சசிகலா புஷ்பா விவகாரத்தையும் ஜெ. பேசிக் கொண்டிருக்கும் போதே, நெஞ்சு எரிவதாகவும் வயிறு வலிப்ப தாகவும் சசிகலாவை கூப்பிட்டு சொன்னார். ""அக்கா நீங்க இரண்டு நாளாக வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளை வேண்டாம் என விட்டு விட்டீர்கள்'' என சசிகலா சொல்லிவிட்டு தண்ணீரை எடுத்து கொண்டு வந்து கொடுத்தார். உடனடியாக கார்டனில் இருக்கும் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமாருக்கு தகவல் பறந்தது.

டி.ஜி.பி.யுடனான சந்திப்பை முடித்துவிட்டு, தனது அறைக்குப் போன ஜெ.வுக்கு வயிற்று வலியும் நெஞ்சுவலியும் அதிகமாகியுள்ளது. டெல்லியில் இருந்து வந்த போன்காலை பேசிக் கொண்டிருந்தார் ஜெ., இரவு 9.30 மணியளவில் ஜெ.வை அவரது அறையில் பார்க்கப் போன சசிகலா, இருக்கையில் மயங்கிச் சாய்ந்திருந்த அவரைப் பார்த்து அலறிவிட்டார். உடனடியாக டாக்டர் சிவக்குமார், அப்பல்லோவில் இருக்கும் டாக்டர் செல்வகுமார் என்பவரை தொடர்பு கொண்டிருக்கிறார். டாக்டர் செல்வகுமாரும், சிவக்குமாரும் சேர்ந்து முதலுதவி சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.

போயஸ் கார்டனில் ஒரு மினி மருத்துவமனையே இயங்குகிறது. அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அங்கே வைத்து ஜெ.வுக்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவக்குமார், ஜெ.வின் மயக்க நிலை மாறாதது கண்டு பதட்டமடைகிறார். அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென அவர்கள் முடிவெடுக்கும் போது மணி 10.30.ஜெ. வழக்கமாக உடல்நிலை பாதிப்பு தொந்தரவு என்றால் அவருக்கு நம்பிக்கையான வெங்கடாசல உடையாருக்கு சொந்தமான ராமச்சந்திரா மருத்துவ மனைக்குதான் செல்வார். ஆனால் இம்முறை வழக் கத்திற்கு மாறாக, (MULTIPLE ORGAN DISORDER)  நுரை யீரல், கிட்னி, இதயம், கணையம் என பலதரப்பட்ட உறுப்புகளின் செயல்பாடு களில் வந்திருக்கும் பிரச் சினை. அதை சரி செய்ய வேண்டு மென்றால் இந்தியாவில் நான்கு மருத்துவமனைகளில்தான் முன்னேறிய மருத்துவ சிகிச்சையளிக்கும் N.D.C.C.U. என்கிற வசதி இருக்கிறது. அதில் ஒன்று நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை என சசிகலாவிடம் சிவக்குமார் சொல்ல, ""ராமச்சந்திரா வேண்டாம், அப்பல்லோ போகலாம்'' என முடிவானது. ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து, முதல்வரின் பாதுகாப்புக்கென அவரது கான்வாயில் இருக்கும் ஆம்புலன்ஸ் மூலமாக அப்பல்லோ மருத்துவ மனைக்கு ஜெ.வை கொண்டு செல்கிறார்கள். மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள N.D.C.C.U.  வார்டில் அனுமதிக்கப்படுகிறார் ஜெ.செப்.22-ம் தேதி இரவு 11.15 மணிக்கு அப்பல்லோவில் ஜெ. அட்மிட்டான தகவல்கள் பறக்கின்றன. நள்ளிரவு அப்பல்லோ மருத்துவ மனையின் தலைமை அதிகாரி சுப்பையா விசுவநாதன், "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார். அவருக்கு காய்ச்சலும் நீர்ச்சத்துக் குறைவும் இருக்கிறது' என செய்திக் குறிப்பு வெளியிட்டார்.உயிர் பாதுகாப்பு கருவிகளின் இணைப்புடன் ஜெ.வுக்கு அவசர சிகிச்சையைத் தொடங்கிய அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர்கள் அவருடைய உடல்வாகை கவனத்தில் கொண்டு, வழக்கமாக குளுகோஸ் ஏற்றும் கை நரம்புகளைத் தேட நேரமாகும் என்பதால், கழுத்து நரம்புகள் மூலம் குளுகோஸையும் மருந்துகளையும் செலுத்தத் தொடங்கினர்./>மொத்தம் 7 அணிகள் கொண்ட ஜெ.வுக்கான சிகிச்சையளிக்கும் டீம் ஒன்றை அப்பல்லோ நிர்வாகம் உடனடியாக உருவாக்கியது. அவசர மருத்துவ சிகிச்சை டீமுக்கு நடராஜன் என்கிற மருத்துவர் தலைமை தாங்குகிறார்.
அது தவிர பெண்களுக்கான கர்ப்பப்பை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட மற்றொரு டீம். இதுதவிர பொது மருத்துவர்கள் மற்றும் உறுப்புகளுக்கான சிகிச்சைகளுக்காக தனித் தனி டீமாக ஜெ.வை பரிசோதிக்கிறார்கள்.23-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, அவரது நுரையீரலை பரிசோதித்த டாக்டர்கள், ஒரு மருத்துவ அறிக் கையை தயார் செய் கிறார்கள். ஜெ.வுக்கு ஏன் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்கள். அப் பல்லோ மருத்துவ மனைக்குள் மட்டும் சுற்றி வந்த அந்த அறிக்கையில் "ஜெ.வின் நுரையீரலின் இடதுபகுதியில் நிறைய தண்ணீர் இருக்கிறது. அது நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவரது நுரையீரல் சில சமயம் வேகமாக இயங்குகிறது. அடுத்த சில நிமிடங்களில் மிக மிக மெதுவாக இயங்குகிறது. அதன் காரணமாக, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 804 ஆக இருக்கிறது' என குறிப்பிடப் பட்டிருக்கிறது.

23-ம் தேதி மதியம், ஜெ.யின் உடலில் சேர்ந்த அதிகமான சர்க்கரை அளவால் பாதிக்கப்படும் இதயத்தின் செயல்பாட்டை சீராக செயல்பட வைக்க பேஸ் மேக்கர் என்கிற கருவி உபயோகப்படுத்தப்படுகிறது. அத்துடன் இதயம், நுரையீரல், கிட்னி போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும் மருந்துகளை கொடுத்து டாக்டர்கள் தீவிர அக்கறையுடன் செயல்படத் தொடங்கினர்.23-ம் தேதி இரவு முழுவதும் இந்தச் சிகிச்சை தொடர்கிறது.ஜெ.யின் அறையில் டாக்டர் சிவக்குமார் மேற்பார்வையில் அப்பல்லோ மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க, அவருடன் சசிகலாவும் இளவரசியும் அங்கு இருந்தபடி ஜெ.வுக்கு உதவியாக செயல்பட்டனர்.இதற்கிடையே ஜெ.வுடைய கிட்னி தொடர்பாக மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை சிங்கப்பூரிலுள்ள செயிண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்களுடனும், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையுடனும், அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையுடனும், கலந்துரையாடி னார்கள் அப்பல்லோ மருத்துவர்கள்.இதுபற்றி கேள்விப்பட்ட முதல்வர் அலுவலக அதிகாரிகளும் தமிழக தலைமைச் செயலாளரும் ஜெ.வை சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் ஏர் ஆம்புலன்சை கொண்டு வந்து நிறுத்த ஆலோசனை செய்து கொண்டுள்ளனர்.

24-ம் தேதி சனிக்கிழமை, காலை 10 மணிஜெ.வின் நுரையீரல் பகுதியிலிருந்து எடுத்த திரவத்தை சோதனை செய்து பார்த்து முடிவுகள் வந்ததில் நுரையீரலில் வைரஸ் கிருமி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெ.வின் சர்க்கரை அளவை சோதித்த போது, 200 பாயிண்ட் குறைந்து 600 பாயிண்டுக்கு வந்தது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்கத் தொடங்கின.முதலில் ஜெ.வின் ரத்த அழுத்தம் நார்மலானது. சனிக்கிழமை மதியம் வரை ஏற்ற இறக்கமாக இருந்த உடல்நிலை பின்னர் மெதுவாக முன்னேறத் தொடங்கியது. ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசித்துக் கொண்டிருந்த ஜெ.வுக்கு ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதில் ஒரு சிறிய கருவி மூலம் சுவாசத்தை அளித்தனர். 24-ம் தேதி மதியத்திற்கு மேல், ஜெ. நன்றாக கண்விழித்து சில வார்த்தைகள் பேசினார். அவருக்கு உடல்நிலை முன் னேற்றம் கண்டதும் குளுகோஸ் போன்ற டியூப் வழியிலான திரவ மருந்து + திரவ உணவுகளை டாக்டர்கள் நிறுத்தினர்.
மருத்துவமனையில் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட திரவ உணவை ஜெ.விடம் கொடுத்தார் சசிகலா. சனிக் கிழமை மதியம் ஜெ. தனக்கு அதிகமாக பசிக்கிறது என சொல்ல, அவருக்கு மென்மையான உணவுகளை சசிகலா கொடுத்தார். ஜெ. சாப்பிட்டதும் மகிழ்ந்த சசிகலா மருத்துவமனை நிர் வாகத்திடம் ""ஜெ. உணவு உட்கொள் கிறார்'' என அறிக்கை தரும்படி கேட்டுக் கொண்டார். அப்பல்லோ மருத்துவ மனையும் ""ஜெ. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
அவர் வழக்கமான உணவு உட்கொள்கிறார்'' என அறிக்கை அளித்தது.22, 23, 24 மூன்று நாட்களும் வெளியுலகத் தொடர்பில்லாத நாட்கள். உணவு உட்கொண்ட பிறகு, ஜெ.விடம் சசி அதுவரை நடந்தவற்றை விளக்கி னார். மன்னார்குடி குடும்பத்தினர் கவனமாக பார்த்துக் கொண்டதும் விளக்கப்பட்டது.  இளவரசியோ, தனது மகன் விவேக் மனைவியுடன் சுவிட்சர்லாந்து சென்றிருந்த பயணத்தை ரத்து செய்து திரும்பியதாகக் குறிப் பிட்டார். சசிகலாவும், தனது தம்பி திவாகரின் மகன் ஜெய் ஆனந்த்  மருத் துவ நிபுணர்களை சந்திக்க சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பறந்திருப்பதாக சொன்னார்.ஜெ. சிகிச்சையிலிருந்தபோது, மருத்துவமனைக்கு வந்த நடிகர் சோவும் அவரது மகனும் நரேந்திர மோடியிடம் இதுகுறித்து பேசுவதாக சொன்னதை தெரிவித்த தோடு, தி.மு.க. தலைவர் கலைஞர், ஸ்டாலின் உட் பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி யும் ஜெ.வின் உடல்நலன் பெற வேண்டும் என வாழ்த்திய தகவல்களையும் சொல்லியுள்ளனர். எந்த ரியாக்ஷனும் காட்டாமல் கேட்டுக் கொண்டார் ஜெ. என கார்டன் வட்டாரங் கள் தெரிவித்தன.ஜெ.வின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தாலும் அவர் அமைச்சர்களையோ அரசு அதிகாரிகளையோ சந்திக்கவில்லை. அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மட்டும் ஜெ.வை சந்தித்தார். மற்றவர்கள் எல்லாம் ஜெ. சிகிச்சை பெற்ற இரண்டாவது மாடியின் கீழ்த்தளம் வரைதான் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி. போன்ற ஒரு சிலரிடம் மட்டும் ஜெ.வின் உடல்நிலை பற்றி சசிகலா விளக்கியிருக்கிறார்.

சென்னை வடபழனி கோவிலில் கலைராஜன் நடத்திய முதல் பூஜை தொடங்கி... தமிழகம் முழுவதும் ஜெ. உடல்நலம் பெற நடத்திய பூஜைகளின் பிரசாதங்கள் பூங்குன்றன் மூலம் வழங்கப்பட்டன. பெற்றுக் கொண்ட சசி "அம்மாவிடம் சொல்கிறேன்' என்றிருக்கிறார். 25-ம் தேதி ஞாயிறு காலை, கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்த ஜெ.விடம் கோவை யில் இந்து முன்னணி நபர்கள் செய்த கலவரம் உட் பட எந்த சென்சிடிவ் விஷயத்தையும் சசிகலாவோ முதல்வர் அலுவலக அதிகாரிகளோ கொண்டு செல்லவில்லை. ஒட்டுமொத்தமாக அமைச்சர்கள், அ.தி.மு.க. மா.செ.க்கள், அரசு அதிகாரிகள், மகளிரணி தொண்டர்கள் என அப்பல்லோ மருத்துவமனை வாசலில் குவிந்து நின்றார்கள்.ஜெ.வின் திடீர் உடல்நலக்குறைவு... தீர்ப்புக்கு தயாராக உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் சில விளைவுகளை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த தமிழகமே ஜெ.வுக்காக உருகுவதையும் அரசு நிர்வாகமே கதிகலங்கி நிற்பதையும் பார்க்கும் தீர்ப்பளிக்கக் கூடிய நீதிபதிகள் ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பளிக்க மாட்டார்கள்.-உள்ளே என்ன நிலவரம் என அறிய முடியாத நிலையில் தங்களுக்குள்ளாக இப்படிப் பேசிக் கொண்டனர்.

ஜெ. உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரது பிரதிநிதி களிடம் உடல்நிலை பற்றி கேட்டோம். ஜெ.வின் பர்சனல் மருத்துவரான டாக்டர் சிவக்குமாரை கேட்டபோது, ""இதைப்பற்றி ஒன்றும் கூற முடியாது'' என மறுத்துவிட்டார். அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் ஜெ. உடல்நிலை பற்றி கேட்டபோது, ""அம்மா உடல்நலம் தேறி நலமாக இருக்கிறார்'' என்றார்.செப்டம்பர் 25 மாலை 5 மணி ஜெ.வின் பர்சனல் டாக்டர் சிவக்குமார் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஜெ.வின் உடல்நிலை பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் ""முதல்வரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை யளிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது. அதற்கு அவசியம் இல்லை. அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நாட்கள் சிகிச்சை தொடர்ந்தபின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்'' என நம்பிக்கையுடன் தெரிவித்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய சூழலில் ஜெ., இருப்பதால் ஆட்சி-கட்சி இவற்றின் மீதான கார்டன் தரப்பின் கவனமும் அதிகரித்துள்ளது.<- span="">
படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின், அசோக்,
செண்பகப் பாண்டியன்.... நக்கீரன்,இன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக