செவ்வாய், 27 செப்டம்பர், 2016

BBC :அப்போலோவில் காவேரி விவகாரம் பற்றி முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை!

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 6,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டுமென கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவு குறித்தும், இந்த விவகாரத்தில் நீடிக்கும் சிக்கலைப் போக்க கர்நாடகா மற்றும் தமிழக அரசின் முதல்வர்கள், மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் கூட்டம் நடத்த வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பது குறித்தும் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டதாக செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, அங்கிருந்தபடியே காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ( கோப்புப் படம்) இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள உத்தரவு குறித்து, மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணிவரை, அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தனது அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலர் ராமமோகன ராவ், தலைமை வழக்கறிஞர் ஆர். முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் முதன்மைச் செயலர் கே.என். வெங்கடரமணன், செயலர் ஏ. ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் 29ஆம் தேதி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர் ராம மோகன ராவ், பொதுப் பணித் துறை செயலர் எஸ்.கே. பிரபாகர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொள்ள வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார். அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் என்ன அம்சங்கள் முன்வைக்க வேண்டும் என்பது குறித்தும் முதல்வருடன் விவாதிக்கப்பட்டதாகவும் தலைமைச் செயலர் அங்கு வாசிக்க வேண்டிய உரை, முதல்வர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டதாகவும் அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதியன்று இரவு உடல் நலக் குறைவின் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது. அவரது உடல் நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில், அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக