வியாழன், 15 செப்டம்பர், 2016

தமிழ்நாட்டில் உள்ள நீர்தேக்கங்கள் பற்றிய தவறான பிரசாரங்கள்.. தமிழ் வியாபாரிகளின் முகநூல்கள்

தமிழ்நாட்டில் உள்ள மொத்த அணைகள் / நீர்த்தேக்கங்கள் : 85
அவற்றில் ராஜா காலத்தில் கட்டப்பட்டவை செம்பரம்பாக்கம், வீராணம், கல்லணை. ஆங்கிலேயர்கள் காலத்தில் 7 நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு சுதந்திரம் பெற்று காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் மொத்தம் 14 . மீதமுள்ள 61 நீர்த்தேக்கங்கள் திமுக அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டவை. 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட திமுக தனது ஆட்சியில் 30 நீர்த்தேக்கங்களையும், 29 ஆண்டுகள் ஆண்ட அதிமுக 31 நீர்த்தேக்கங்களையும் இந்த மாநிலத்தில் கொண்டு வந்துள்ளார்கள்.
 Sivasankaran Saravanan :பேஸ்புக்கில் கடந்த ஒருவார காலமாக ஒரு வீடியோ போய்க்கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சினை பற்றி கருப்பு டீ சட்டை அணிந்துகொண்டு ஒரு இளைஞர் கோபத்துடன் பேசுகிறார். 15 ஆயிரம் விருப்பங்களும் 50 ஆயிரம் பகிர்வுகளையும் கடந்துள்ள அந்த வீடியோவில் அவர் பேசுகிறார் : தமிழ்நாட்டில் எப்ப கடைசியா அணை கட்டினாங்கன்னு தெரியுமா? எனக்குத்தெரிந்து லிங்கா படத்தில் ரஜினி கட்டினார். காமராஜர் காலத்தில் ஒன்னு ரெண்டு கட்டினாங்க. அதுக்குப் பிறகு ஒண்ணுமே இல்ல!
கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் பார்த்துள்ள அந்த வீடியோவில் அவர் சொன்னதற்கு ஒருத்தராவது மறுப்பு தெரிவித்துள்ளார்களா என்றால் அதுதான் இல்லை.
தமிழ்நாட்டில் காமராஜருக்கு பிறகு அணைகள் நீர்த்தேக்கங்களே அமைக்கப்படவில்லை என்ற இமாலய பொய்யானது பல காலமாக பரப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த அணைகள் / நீர்த்தேக்கங்கள் : 85
அவற்றில் ராஜா காலத்தில் கட்டப்பட்டவை செம்பரம்பாக்கம், வீராணம், கல்லணை. ஆங்கிலேயர்கள் காலத்தில் 7 நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு சுதந்திரம் பெற்று காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் மொத்தம் 14 . மீதமுள்ள 61 நீர்த்தேக்கங்கள் திமுக அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டவை. 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட திமுக தனது ஆட்சியில் 30 நீர்த்தேக்கங்களையும், 29 ஆண்டுகள் ஆண்ட அதிமுக 31 நீர்த்தேக்கங்களையும் இந்த மாநிலத்தில் கொண்டு வந்துள்ளார்கள்.
செய்தித்தாள்கள் பத்திரிகைகள் எதையும் படிக்காமல் பேஸ்புக் வாட்சப் மூலமாக மட்டுமே விஷயங்களை தெரிந்துகொள்ளும் இணைய மந்தைகளுக்கு, இத்தகைய தகவல்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன என்பது கூட தெரியாமல், அவற்றை தேடிப் படிக்க சோம்பேறித்தனம் பட்டு மந்தை புத்தியுடன் பொய்யான தகவல்களை பரப்ப மட்டுமே தெரியும்...! இந்த லட்சணத்தில, இப்ப இருக்க பசங்க அந்த காலம் போல இல்ல, எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்காங்க என்ற பெருமை மயிறு வேற...!  முகநூல் பதிவு   : Sivasankaran Saravanan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக