திங்கள், 5 செப்டம்பர், 2016

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா : நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவேண்டும்.. கட்சிகளுடன் ஆலோசனை !

நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்: அனைத்துக் கட்சிகளுடன் நாளை ஆலோசனை: சித்தராமையா பேட்டிகர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றார்.  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக