திங்கள், 5 செப்டம்பர், 2016

ஆப்கன் மாஜி அதிபர் கர்சாய்க்கு டில்லியில் பெண் குழந்தை பிறந்தது

புதுடில்லி:ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாஜி அதிபர் ஹமிது கர்சாய். இவருக்கு தலைநகர் புதுடில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது கர்சாய்க்கு நான்காவது குழந்தை ஆகும். இது குறித்து இந்தியாவிற்காக ஆப்கானிஸ்தான் தூதர் முகமது அப்தாலி கூறுகையில், “ஆப்கான் மாஜி அதிபர் ஹமிது கர்சாய் 4-வது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார். டில்லியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சனிக்கிழமை காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கர்சாய் சனிக்கிழமை அன்று மருத்துவமனைக்கு வருகை தந்து தனது குழந்தையையும், மனைவியையும் பார்வையிட்டார். புதிதாக பிறந்துள்ள குழந்தை லண்டன் நகருக்கு கொண்டு செல்லப்படுகிறது” என்றா    தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக