சனி, 17 செப்டம்பர், 2016

வடிவேலு தமன்னா விஷால் சூரி ... கலக்க வரும் கத்தி சண்டை

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா முதன்முறையாக இணைந்து
நடித்துள்ளப் படம் 'கத்திச் சண்டை' . இதில் வடிவேலு, சூரி என மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது. வருகின்ற தீபாவளி யன்று திரைக்கு வர தயாராக உள்ள இந்த படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'துப்பறிவாளன்' படத்தில் விஷால் நடிக்க உள்ளார். விஷாலே தயாரித்து நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங், முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவிருக்கிறார்கள் .
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 23ம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கிறது. இதில் சிறப்பம்சமாக தற்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . அவர் நடிக்கும் கதாபாத்திரம் என்ன என்பதை படக்குழு மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது . ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய திரைப்படங்களில் நடித்த பாண்டியராஜன் (அஞ்சாதே),ஒய்.ஜி.மகேந்திரன் (யுத்தம் செய்) போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களின் கதாபாத்திரங்கள் மிக வித்யாசமாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே நிச்சயம் இயக்குநர் பாக்யராஜ்-ன் கதாபாத்திரமும் வித்யாசமாக இருக்கும் என எதிர் பார்க்கலாம் நக்கீரன்,இன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக