வியாழன், 15 செப்டம்பர், 2016

91,308 சுயநலவாதிகள் bogusvotescm ஜெயலலிதாவிடம் சரண்டர்... காவேரியா? கர்நாடகமா? அப்படீன்னா? கொர்ர் கொர்ர் கொர்ர்

பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 91,308 பேர் முதல்வரும், அதிமுக பொதுச்
செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுக-வில் ஆயிரக்கணக்கானோர் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. திருவிழா கூட்டம் போல் ஒய்.எம்.சி.ஏ. மைதானமே காட்சியளித்தது. அதிமுக-வில் புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
“கடந்த காலங்களில் திமுக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளில் பணியாற்றி வந்த 91,308 பேர் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
அதிமுக-வில் இணைந்து பொதுவாழ்வைத் தொடர இருப்பவர்களுக்கு அதிமுக மாபெரும் அரசியல் பயிற்சிக்களமாக இருக்கும். தமிழகத்தில் எனது தலைமையிலான அதிமுக அரசின் மக்கள் நலப் பணிகளைக் கண்டு அவற்றால் பயனடைந்து தொடர்ந்து ஏராளமானோர் பலர் அதிமுக-வில் இணைகின்றனர். மாநிலம் தாண்டி மக்கள் நலத் திட்டப்பணிகள் நாடு முழுவதும் பேசப்படுகிறது. வட இந்தியாவில் உள்ள மாநிலத்தில் ‘அம்மா உணவகம்’ போல உணவகங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஏராளமான மக்கள் நலப் பணிகள் செய்து முடிக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வின் மகத்தான வெற்றிக்குப் பாடுபட வேண்டும். அதிமுக-வில் இணைந்தவர்களுக்கு மக்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன” என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
தமாகா-வைச் சார்ந்த திருச்சி சாருபாலா தொண்டைமான், திமுக-வைச் சார்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மகன் ரமேஷ், மதிமுக-வைச் சார்ந்த பூவை.கந்தன், நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை ‘பசி’ சத்யா ஆகியோர் அதிமுக-வில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக