வியாழன், 29 செப்டம்பர், 2016

பாகிஸ்தானில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது, 38 பயங்கரவாதிகள் பலி.. இந்திய ராணுவ நடவடிக்கையில்

புதுடெல்லி, இந்திய ராணுவம் நள்ளிரவு நடத்திய பயங்கரவாதிகள் அழித்தொழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானில் 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் நுழைந்து தாக்குதல்கள் நடத்தி 18 வீரர்களை கொன்று குவித்ததை அடுத்து, இனியும் பொறுமை காத்து பலன் இல்லை என்ற நிலையில், எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி எல்லைப் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து விமானப்படை, தரைப்படையை இணைத்து நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பாகிஸ்தான் பகுதியில், 2 கி.மீ., தொலைவுக்குள் அமைந்துள்ள பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல் மற்றும் லிபா செக்டார்களில் இந்த துல்லிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கின. அதிகாலை 4.30 மணிக்கு முடிவுக்கு வந்தன. இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான் படையினர் 2 பேரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக